மதுரையில் முதலமைச்சர் காரை வழிமறித்து மனு கொடுத்த விளையாட்டு வீரர்.

மதுரையில் முதலமைச்சர் காரை வழிமறித்து மனு கொடுத்த விளையாட்டு வீரர்.
X

மதுரையில் முதலமைச்சரிடம் மனு அளித்த மாற்றுத்திறனாளி.(விளையாட்டுவீரர்)

மதுரையில் முதலமைச்சர் காரை வழிமறித்த மாற்றுத்திறனாளியின் மன தைரியம்.

தமிழக முதலமைச்சர் மதுரை சுற்றுப்பயணத்தில் கலெக்டர் அலுவலத்தில் மு.க ஸ்டாலின் காரை வழிமறித்து நேரடியாக மனு கொடுத்ததால் சற்று பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பேட்மிட்டன் வீரர் மற்றும் பயிற்சியாளர் பத்ரி நாராயணன். இவர் 17 பாரா பேட்மிட்டன் போட்டியில் சர்வதேச மற்றும் பல்வேறு தேசிய மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற பதக்கம் வென்றவர்.

இவர் கடந்த 10 ஆண்டுகளாக அரசு பயிற்சியாளர் வேலை வேண்டுமென தொடந்து மனு அளித்து வருகிறார்.முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் மதுரையில் நேரில் சந்தித்து மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் உயர்நீதிமன்றம் இவருக்கு அரசு வேலையை தர வேண்டும் என பரிந்துரை செய்தும் தற்போது வரை எந்த ஒரு நடவடிக்கையும் தமிழக அரசு எடுக்கவில்லை.

இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிக்காக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்த தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் காரை வழிமறித்து தன்னுடைய மனுவை பெற்றுக் கொள்ளுங்கள் என பத்ரிநாராயணன் குரல் எழுப்பினார்.

அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தினர். அதனை தொடர்ந்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவரை நேரில் அழைத்து அவருடைய மனுவை பெற்றுக் கொண்டதோடு மட்டுமல்லால் உடனடியாக உங்களுடைய கோரிக்கை நிறைவேற்றப்படும் என தெரிவித்தார் தமிழக முதல்வரின் காரை வழிமறித்து மனு கொடுத்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!