மதுரை மாநகராட்சி சார்பில் மரக்கன்றுகள் நடவு: ஆணையாளர் அழைப்பு

மதுரை மாநகராட்சி மியாவாக்கி (அடர்வனம்) முறையில் மரக்கன்றுகள் நட்டு பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, மதுரை மாநகராட்சி ஆணையர் ப. கார்த்திகேயன் வெளியிட்ட தகவல்: மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட சாலை ஓரங்கள், காலி இடங்கள் மற்றும் பல்வேறு பகுதிகளில் மியாவாக்கி முறையில், மரக்கன்றுகள் 2021 அக்டோபர் 2 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இந்நிகழ்வுகளில், பங்கேற்று மரக்கன்றுகள் நடவும், கன்றுகளை பராமரிக்கவும் விருப்பம் உள்ளவர்கள், மண்டலம் 1 மற்றும் 3 -94437 39512, மண்டலம் 2 - 94437 39518 , மண்டலம் 4 - 98944 29957 , மைய குறைதீர் மையம்- 84284 25000. அந்தந்த மண்டல உதவி ஆணையாளர்களின் தொலைபேசி வாயிலாகவோ அல்லது குறைதீர் மையம் தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என்றார் அவர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu