மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பான பொதுநல வழக்கு-பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பான பொதுநல வழக்கு-பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு
X
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பிரச்னை தொடர்பாக, மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரைக் கிளை உத்தரவு

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரம்; மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பான பொதுநல வழக்கு குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த புஷ்பவனம், தாக்கல் செய்த பொதுநல மனு, நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

தெலுங்கானா மற்றும் மதுரையில், ஒரே நேரத்திலேயே எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது என்றும், தெலுங்கானா எய்ம்ஸ் மருத்துவமனை சார்பாக எம்.பி.பி.எஸ். சேர்க்கை தொடங்கப்பட்டு உள்ளதாக மனுதாரர் தரப்பில் முன் வைக்கப்பட்டது. இதனை, பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் மத்திய ,மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜூன் 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!