மதுரை அருகே கண்மாயில் தவறிவிழுந்த பெண் உயிரிழப்பு

மதுரை அருகே கண்மாயில் தவறிவிழுந்த பெண் உயிரிழப்பு
X
மதுரையில் நடந்த பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்புடைய 6 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து 3 பேரை கைது செய்தனர்

பெருங்குடியில் கண்மாயில் தவறிவிழுந்த பெண் தண்ணீரில் மூழ்கிபலி:

மதுரை அருகே பெருங்குடியில், கண்மாயில் தவறி விழுந்து பெண் பலியானது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை அருகே ஓ.ஆலங்குளத்தை சேர்ந்தவர் வீரபாண்டி மனைவி சசிகலா(34 ).இவர் அதிகாலை கண்மாய் கரையோரம் சென்றபோது எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து நீரில் மூழ்கி பலியானார்.

இந்த சம்பவம் குறித்து அவருடைய அண்ணன் தாமோதரன் பெருங்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து, சசிகலாவின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கீரைத்துறையில் வாலிபரின் கண்ணில் மிளகாய் பொடியை தூவி பிளேடால் தாக்குதல்: 3 பேரைத் தேடும் போலீஸார்

கீரைத் துறையில், வாலிபரின் கண்ணில் மிளகாய் பொடி தூவி பிளேடால் தாக்குதல் நடத்திய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.வில்லாபுரம் கொத்தனார் தொப்புவை சேர்ந்தவர் முருகேசன்(55.). இவரது உறவினர் ராஜ ஜெயந்தன். முருகேசனின் மகனுக்கும் ராஜஜெயந்தனுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில், கொத்தனார் தோப்பு வில் முருகேசனின் மகனை வழிமறித்து ராஜஜெயந்தன், மணி ,டிராவிட், ஆகியோர் மிளகாய் பொடியை தூவி விட்டு பிளேடால் தாக்கி விட்டு ஓடி விட்டனர். இந்த சம்பவம் குறித்து, முருகேசன் கீரைத்துரை போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து மூவரையும் தேடி வருகின்றனர்.

குடிபோதையில் அக்காவை அரிவாளால் வெட்டிய தம்பி கைது:

குடிபோதையில் அக்காவை அரிவாளால் வெட்டிய தம்பியை போலீசார் கைது செய்தனர் . பழைய விளாங்குடி டீச்சர்ஸ் காலனி 2-வது தெருவை சேர்ந்தவர் பழனி மனைவி நித்திலா(24 ).இவரது தம்பி குமார்(23.). இவர் குடிபோதையில் வந்து அக்காவை அவதூறாக பேசி அரிவாளால் வெட்டிவிட்டு ஓடிவிட்டார். இந்த சம்பவம் குறித்து நித்திலா, கூடல்புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து அக்காவை வெட்டிய தம்பியை கைது செய்தனர்.

பெண் உள்பட 2 பேரிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது:

மதுரை கோரிப்பாளையத்தில், பெண் உள்பட 2 பேரிடம் செல்போன் பறித்த இருவரை போலீசார் கைது செய்தனர் . திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்தவர் சந்தியா( 24). இவர் கோரிப்பாளையம் பஸ் ஸ்டாப்பில் நின்ற போது, இவர் வைத்திருந்த செல்போனை இருவர் பறித்து சென்று விட்டனர். இதே போல், முடுவார்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி 45. இவர் கரிமேட்டிலிருந்து கோரிப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் வந்தபோது, அவரிடம் இருந்த செல்போனையும் பறித்து சென்று விட்டனர் . இந்த சம்பவம் குறித்து, இருவரும் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து அவர்களிடம் செல்போன் பறித்த முடுவார்பட்டி ஆதனூரைச் சேர்ந்த பாண்டித்துரை(41), திண்டுக்கல் மேட்டுக்கடை யைச் சேர்ந்த பாலமுருகன்( 31 ) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

Tags

Next Story