மதுரை தாசில்தார் நகரின் அவலநிலை: மேயர் கண்டு கொள்வாரா?
மதுரை அண்ணா நகர் தாசில்தார் நகர் காதர் மொய்தீன் தெருவின் அவல நிலை.
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 36- வது வார்டு மதுரை மேலமடை, தாசில்தார் நகர் மருது பாண்டியர் தெரு காதர் மொய்தீன் தெரு, வீரவாஞ்சி தெரு, உள்ளிட்ட பல தெருக்களில் கழிவு நீரும் சாக்கடை நீரும் சாலை நடுவே குளம் போல தேங்கியுள்ளன. மேலும் ,மருதுபாண்டி தெருவில் மாநகராட்சி நிர்வாகமானது பாதாள சாக்கடை பணிக்காக ஆங்காங்கே, குழிகள் தோண்டப்பட்டு, ஒப்பந்ததாரர்கள் சரியாக மூடப்படாததால் , இரவு நேரங்களில் பொதுமக்கள் பள்ளங்களை தடுமாறி விழுகின்ற நிலை ஏற்படுகிறது.
மேலும், சாலையில் தோண்டப்பட்டு பல நாட்கள் ஆகியும் சாலை சீரமைப்பணியை மாநகராட்சி மேற்கொள்ளவில்லை என, சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மதுரை தாசில்தார் நகர், காதர் மொய்தீன் தெருவில் பல மாதங்களாக சாக்கடை நீர் சாலையிலே ஆர்டீசனின் ஊற்று போல வெளியேறிக் கொண்டிருக்கிறது.
அத்துடன், வீரவாஞ்சி தெரு, அன்பு மலர்தெரு, குருநாதன் தெரு உள்ளிட்ட தெருக்களில், பள்ளங்கள் சரியாக மூடப்படாமல் சாலையிலே மழை நீர் தேங்கி அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் தவறி கீழே விழுகின்ற நிலை ஏற்படுகிறது.
மதுரை மாநகராட்சி உதவி ஆணையாளர், மற்றும் உதவி பொறியாளரிடம் இப்பதி மக்கள் கவனத்திற்கு கொண்டு சென்றோம். இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப் படவில்லை என, கூறப்படுகிறது. அத்துடன், பாதாள சாக்கடை பணிக்காக இயந்திரங்கள் மூலம் பள்ளங்கள் தோண்டப்படும் போது பல தெருக்களில் குடிநீர் குழாய்கள் உடைக்கப்பட்டு, ஒரு மாதத்திற்கு மேலாக வீரவாஞ்சி தெருவில் குடிநீர் சப்ளை வரவில்லை என, அப்பதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மதுரை மருதுபாண்டியர் தெருவில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஹாலோ பிளாக்ஸ் கற்கள் பதிக்கப்பட்டு சாலை சீரமைக்கப்பட்டதாம்.
மதுரை நகரில் பல தெருக்களில் இதேபோலதான் சாலைகளில் திடீர் குளங்கள், குட்டைகள் உருவாகியுள்ளது. இது குறித்து, மதுரை கோமதிபுரம் ஜூபிலி டவுன் பகுதியைச் சேர்ந்தவர் கூறுகையில், மதுரை அண்ணாநகர் தாசில்தார் நகர், கோமதிபுரம் பகுதிகளில் பல தெருக்களில் இரவு நேரங்களில் வாகனங்கள் செல்ல பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.
மேலும், சாலைகளின் கழிவு வாய்க்கால் மேலே போடப்பட்டுள்ள மூடிகள் பல இடங்களில் உடைந்து மழைகாலங்களில், கழிவு நீர் சாலைகளில் தேங்கி விடுகிறது. அதை இயந்திரம் மூலம் கழிவுநீரை வெளியேற்ற மாநகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu