மதுரை அருகே கழுத்தை நெரித்து மனைவி கொலை: காவல்நிலையத்தில் கணவர் சரண்

மதுரை அருகே கழுத்தை நெரித்து மனைவி கொலை:  காவல்நிலையத்தில் கணவர் சரண்
X
தனிக்குடித்தனம் செல்ல வேண்டுமென கூறியதால் ஆத்திரமடைந்த கணவர் தனது மனைவியை கொலை செய்துள்ளார்

கழுத்தை நெரித்து மனைவி கொலை கணவன் போலீசில் சரணடைந்தார்.

மதுரை எல்லீஸ் நகர் ஆர். சி .சர்ச் தெருவில் வசித்து வரும் பெயிண்டர் நாகவேல்( 33.) இவருக்கும், சுதா என்பவருக்கும்கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. நாகவேல் தனது மனைவி சுதா , அம்மா சாந்தி தம்பி தாஸ் ஆகியோருடன் கூட்டுக்குடித்தனம் இருந்து வந்தார்.

நேற்று இரவு நாகவேல் என்பவருக்கும் அவரது மனைவி சுதா என்பவருக்கும் தனியாக வீடு எடுத்து தனிக்குடித்தனம் செல்ல வேண்டும் என பேச்சுவார்த்தையின் போது தகராறு ஏற்பட்டு, கோபம் அடைந்த நாகவேல் மனைவி சுதாவை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இதையடுத்து, தனது மனைவியை கொலை செய்து விட்டதாக ஒப்புக்கொண்டு காவல் நிலையத்தில் நாகவேல் சரணடைந்தார் . சம்பவ இடத்திற்கு விரைந்த எஸ். எஸ். காலனி போலீசார் சுதாவின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story