இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் சார்பில் சாரதா பள்ளியில், வித்யா ஆரம்பம் நிகழ்ச்சி
மதுரை சிம்மக்கல் சாரதா பள்ளியில் நடைபெற்ற வித்யாரம்ப நிகழ்ச்சி.
வித்யாரம்பம் விழாவானது ( வித்யா என்றால் "அறிவு", ஆரம்பம் என்றால் "துவக்கம்") கோயில்களிலும் வீடுகளிலும் நடைபெறும். பெற்றோர் இந்த நாளில் கோயில்களுக்கு வந்து தங்கள் குழந்தைகளை கற்றலில் ஈடுபடுத்துவது வழக்கம்.
சரஸ்வதி தேவி அறிவு மற்றும் ஞானத்தின் தெய்வம்.கல்வி தெய்வமான, சரஸ்வதி மற்றும் ஆசிரியர் (குரு) ஆகியோருக்கு குரு தட்சணை கொடுத்து மரியாதை செய்ய வேண்டிய நாளாகும்.
விஜயதசமி அன்று கோவில்களில் வைத்து பச்சரிசியைக் கொண்டு அட்சரம் எழுதி குழந்தைகள் தங்களின் கல்வியை ஆரம்பித்து தொடங்கினால் ஜெயமாக முடியும் என்பது நம்பிக்கை. குழந்தைகளின் கை பிடித்து, தரையில் பரப்பி வைத்திருக்கும் பச்சரிசியில் பொதுவாக மந்திரத்தை எழுதி துவங்கப்படுகிறது. குழந்தைகள் தமிழெழுத்தை ஆரம்பிக்கும்போது ஓம் நமச்சிவாய என்றோ ஓம் நமோ நாயாரணாய என்றும் துவங்குகிறார்கள் அதன் பிறகு 'அ' என்று எழுத கற்றுக் கொடுப்பது வித்யாரம்பம் எனப்படுகிறது.
மதுரை ஸ்ரீ சாரதா பள்ளியில் இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் சார்பில் நடைபெற்ற வித்தியாரம்பம் நிகழ்ச்சியில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து வந்து குரு மூலம் உபதேசம் பெற்று கல்வியில் மேன்மை அடைய செய்ய இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
பெற்றோர்கள், பொருட்கள் விரலி மஞ்சள், பச்சரிசி, தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு, தாம்பாளம், குழந்தைக்கு மாலை, குதட்சணை கொண்டு வந்து இந்த வழிபாட்டில் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu