மதுரை நகரில் நடைபெற்ற பல்வேறு குற்ற சம்பவங்கள்: போலீஸார் விசாரணை
முன்விரோதத்தில் தாக்குதல் 2 பேர் கைது.
கரும்பாலை சந்தன மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முனியசாமி மகன் மணிகண்டன்( 23.) கரும்பாலை நடுத்தெருவை சேர்ந்தவர் நாகேந்திரன் மகன் இசக்கிமுத்து( 24.) இவர்களுக்குள் முன்விரோதம் இருந்தது. இந்த நிலையில், கரும்பாலை கீழத்தெருவில் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர் .இந்த சம்பவம் குறித்து, மணிகண்டன் புகாரில், அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இசைக்கி முத்துவை கைது செய்தனர். இசக்கிமுத்து புகாரில் வழக்குப் பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.
செயின் பறிக்க முயன்ற வாலிபர் கைது:
மதுரை செல்லூர் பாலம் மகளிர் கல்லூரி அருகே செயின் பறிப்பு முயற்சியில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.மதுரை திருப்பாலை டுவாட் காலனியை சேர்ந்தவர் சுந்தர்(53.) சம்பவத்தன்று இவர் செல்லூர் பாலம் மகளிர் கல்லூரிஅருகே சென்றபோது. 2 வாலிபர்கள் அவரிடம் செயின் பறிக்க முயன்றனர். அவர் கூச்சல் போடவே ,அவர்கள் தப்பி ஓடி விட்டனர். இந்த சம்பவம் குறித்து, சுந்தர் செல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நெல்பேட்டை காயிதே மில்லத் நான்காவது தெருவைச் சேர்ந்த ஜாகிர் உசேன் மகன் அசாருதீன்(22 .)என்ற வாலிபரை கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த மற்றொரு வாலிபரை தேடி வருகின்றனர்.
வில்லாபுரத்தில் மளிகை கடையில் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை:
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா கோட்டை பட்டினத்தைச் சேர்ந்தவர் கல்யாணசுந்தரம் மகன் செல்வம்21. இவர் அருப்புக்கோட்டை மெயின் ரோடு வில்லாபுரத்தில் உள்ள ஒரு மளிகைக் கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில், இரண்டு தினங்களாக மன உளைச்சலில் இருந்து வந்த செல்வம் மளிகை கடையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து, அவனியாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது பிரேதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாய் கண்டித்ததால் மனமுடைந்து சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை:
மதுரை பெத்தானியாபுரத்தில் தாய் கண்டித்ததால் மனமுடைந்த சிறுவன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். பெத்தானியாபுரம் அகஸ்தியர் 2-வது தெருவை மேட்டுத்தெருவை சேர்ந்தவர் வேலன் மகன் சதீஷ்குமார்(17.).இவர் வேலைக்கு செல்லாமல் சுற்றி திறந்துள்ளார். இதை ,அவரது தாய் கண்டித்துள்ளார். இதனால், மனமுடைந்த சிறுவன் சதீஷ்குமார் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இந்த சம்பவம் குறித்து ,சிறுவனின் தாய் சாந்தி கொடுத்த புகாரில் கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவில் உண்டியல் உடைப்பு வாலிபர் கைது:
மதுரை விளாச்சேரியில் கோயில் உண்டியலை உடைத்து போது வாலிபரை கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விளாச்சேரி யாதவர் தெருவைச் சேர்ந்தவர் பாஸ்கரன்(55.)இவர் யாதவர் தெரு மங்களபெரியசாமி கோவில் வழியாக சென்றுகொண்டிருந்தார். அப்போது, வாலிபர் ஒருவர் அந்த கோவில் உண்டியலை உடைத்து கொண்டிருந்தார். அதைக் கண்ட பாஸ்கரன், அந்த வாலிபரை விரட்டி பிடித்துதிருநகர் போலீசில் ஒப்படைத்தார். போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், அந்த வாலிபர் விளாச்சேரி மொட்ட மலை சௌராஷ்ட்ரா புரத்தைச் சேர்ந்த சரவணன் என்ற பட சரவணன்(24 )என்று தெரிய வந்தது அவரை கைது செய்தனர்.
வீடு புகுந்துரூ 6 லட்சம் ரொக்கம் நகை திருட்டு
மதுரை செல்லூரில் வீடுபுகுந்து ரூபாய் 6 லட்சம் ரொக்கம் மற்றும் 3 பவுன் நகை திருடிய மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். செல்லூர் கீழத்தோப்பு என்பது வீட்டைச்சேர்ந்தவர் காசிமாயன் மனைவி மேகலா 37. இவரது வீட்டில் புகுந்த மர்மநபர் வீட்டில் வைத்திருந்த ரூபாய் 6 லட்சம் பணம் மற்றும் 3 பவுன் தங்க நகையை நபர் திருடிச் சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து மேகலா செல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து நகை பணம் திருடிய ஆசாமியை தேடி வருகின்றனர்.
குடிபோதையில் மைத்துனர் குத்திக்கொலை அக்காள் கணவரை தேடும் போலீஸார்:
மதுரை சிலைமான் அருகே நள்ளிரவில் குடிபோதையில் மைத்துனரை குத்திக் கொன்ற அக்காள் கணவரை போலீசார் தேடி வருகின்றனர். திருநெல்வேலி சுத்தமல்லி விலக்கு ஜீவாநகர் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து மகன் முனீஸ்வரன் 22. இவருடைய அகலக்கால் முனீஸ்வரி. முனீஸ்வரியின்கணவர் மதுரைவீரன் 43 .இவர் சிலைமான் அருகே கொண்டபெத்தான் கிராமத்தை சேர்ந்தவர். நேற்று நள்ளிரவு இருவரும் மது அருந்திக் கொண்டிருந்த போது குடிபோதையில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
இந்தநிலையில், ஆத்திரமடைந்த மதுரை வீரன் மைத்துனர் முனீஸ்வரனை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு ஓடி விட்டார்.இன்று அதிகாலை இந்த சம்பவம் அக்கா முனீஸ்வரிக்கு தெரியவந்தது. அவர், சிலைமான் போலீசில் புகார் செய்தார். போலீசார் கொலை செய்யப்பட்ட முனிஸ்வரன் உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து அவரை கொலை செய்த அக்காள் கணவர் மதுரை வீரனை தேடி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu