மதுரையில் சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் திடீர் தர்ணா..!

மதுரையில் சுற்றுலா வாகன ஓட்டுநர்கள்  மற்றும் உரிமையாளர்கள் திடீர் தர்ணா..!
X

மதுரையில் சுற்றுலா வாகனங்களுக்கான வரி முறைகளை மாற்றி அமைக்க வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடந்தது.

மதுரையில் டிராவல்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சுற்றுலா வாகனங்களுக்கான வரிவிதிப்பு முறைகளை மாற்றி அமைக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி தர்ணா போராட்டம் செய்தனர்.

மதுரையில் டிராவல்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சுற்றுலா வாகனங்களுக்கான வரிவிதிப்பு முறைகளை மாற்றி அமைக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி தர்ணா போராட்டம் செய்தனர்.

மதுரை:

மதுரை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு டிராவல்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தர்ணா போராட்டம் நடத்தினர்.

தமிழ்நாடு அரசு பயன்பாட்டில் உள்ள சுற்றுலா வாகனங்களுக்கு ஆயுட்கால வரி விதித்து அதை 23தினங்களுக்குள்( நவம்பர் 30க்குள்) கட்ட வேண்டும் என, அறிவித்துள்ளது.

அதில், புதிதாக வாங்கும் சுற்றுலா வாகனங்களுக்கு 20சதவீத ஆயுட்கால வரியாகவும் பயன்பாட்டில் உள்ள சுற்றுலா வாகனங்களுக்கு 18.75சதவீதம் ஆயுட்கால வரி விதித்துள்ளது என்றும்


ஒரு சுற்றுலா வாகனத்திற்கு ஆயுட்கால வரி என்பது 15வருடம் என்று உள்ள நிலையில் 12வருடங்கள் முறையாக வட்டி கட்டிய பிறகு மீண்டும் 15வருடத்திற்கு ஆயுட் கால வரி கட்ட சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்வது என்றும் அதனால் டிராவல்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. அதனால் சுற்றுலா வாகனத்திற்கான ஆயுட்கால வரியை வாபஸ் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழ் நிலை ஏற்பட்டதை தொடர்ந்து, ஏராளமான‌ போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, சுற்றுலா வாகன ஓட்டுநர் மற்றும் உரிமையாளர்கள் களைந்து சென்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!