கூலி உயர்வு வழங்க வலியுறுத்தி தையல் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

கூலி உயர்வு வழங்க வலியுறுத்தி  தையல் தொழிலாளர்கள்  ஆர்ப்பாட்டம்
X

கூலி உயர்வு வழங்கக்கோரி மதுரையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தையல் தொழிலாளர் சங்கத்தினர்

இலவச பள்ளி சீருடை தைக்கும் தையல் தொழிலாளிகளுக்கு ஆண்டுதோறும் 5 % கூலி உயர்வு வழங்கப்படும். ஆனால் 2015 முதல் வழங்கவில்லை

கூலியை உயர்த்தி வழங்க வலியுறுத்தி மகளிர் தையல் கூட்டுறவு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மதுரை மற்றும், மதுரை மாவட்ட தையல் தொழிலாளர் சங்கம் சி.ஐ.டி.யு. சார்பில், மகளிர் தையல் கூட்டுறவு தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக சித்ரா தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தமிழக அரசு சமூக நலத்துறையின் கீழ் மகளிர் தையல் கூட்டுறவு மூலம் துணிகளை பெற்றுக் கொண்டு , பெண் தையல் உறுப்பினர்கள் கூலிக்கு தைத்து கொடுத்து வருகிறார்கள்.‌ தமிழக அரசால் வழங்கப்படும் இலவச பள்ளி சீருடை தைக்கும் தையல் கலைஞர்களுக்கு வருடந்தோறும் 5 விழுக்காடு கூலி உயர்வு வழங்கப்படும். ஆனால், கடந்த 2015 முதல் இந்தக் கூலி உயர்வு வழங்கப்படவில்லை. எனவே, உடனடியாக கூலியை உயர்த்தி வழங்க வேண்டும். கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும்.

இலவச சீருடை தைக்கும் பெண்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும். தையல் கூட்டுறவு சங்கத்தில் லாபத்தின் அடிப்படையில் தீபாவளி போனஸ் வழங்க வேண்டும். சிக்கன சேமிப்பு பிடித்தம் செய்வதை பாஸ் புத்தகத்தில் எழுதிக் கொடுக்க வேண்டும். துணி தைத்து முடித்தவுடன் உடனுக்குடன் கூலியை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பட்டத்தில் எழுப்பப்பட்டன. இதில், நிர்வாகிகள் ஆர். தெய்வராஜ் , பொன்ராஜ், எஸ்.சந்தியாகு, கெளரி மற்றும் பலர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!