மதுரை மாநகராட்சி பள்ளியில் அறிவியல் கண்காட்சி: ஆணையாளர் ஆய்வு

மதுரை மாநகராட்சி பள்ளியில் அறிவியல் கண்காட்சி: ஆணையாளர் ஆய்வு
X

மதுரை மாநகராட்சி பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியை பார்வையிட்ட ஆணையாளர் ப. கார்த்திகேயன்

மேல்நிலை உயர்நிலை பள்ளிகளைச்சார்ந்த 120 மாணவர்கள் பங்கேற்று புதுமையான ஆற்றல், நவீன படைப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனர்

மதுரை மாநகராட்சி வெள்ளிவீதியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், ஹெச்.சி.எல். நிறுவனத்தின் சார்பில் நடைபெற்ற மாநகராட்சி பள்ளி, மாணவ, மாணவிகள் பங்கேற்ற இளம் கலாம் அறிவியல் கண்காட்சியினை, ஆணையாளர்கா.ப. கார்த்திகேயன் துவக்கி வைத்தார்.

அறிவியல் துறையில் மாணவர்களின் திறமையை வளர்க்கவும், ஊக்குவிக்கவும் மதுரை மாநகராட்சி பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் ஹெச்.சி.எல். அறக்கட்டளையில் சார்பாக நவீன அறிவியல் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக , இந்த ஆண்டு இளம் கலாம் அறிவியல் கண்காட்சி வெள்ளி வீதியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது.

இந்த கண்காட்சியில், மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை உள்ள 24 மேல்நிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளை சார்ந்த 120 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். புதுமையான ஆற்றல், நவீன படைப்புகளை காட்சிப்படுத்தி வைத்திருந்தனர். அறிவியல் சார்ந்த ஓவியங்களும் வரையப்பட்டுள்ளதையும், அறிவியல் தொழில்நுட்ப சாதனங்களை கொண்டு அறிவியல் கண்காட்சி வைக்கப்பட்டிருந்தது. இதை பார்வையிட்ட ஆணையாளர், கண்காட்சி தொடர்பான விளக்கங்களை மாணவிகளிடம் கேட்டறிந்தார். நிகழ்ச்சியில், கல்வி அலுவலர் (பொ) ராஜேந்திரன், ஹெச்.சி.எல். நிறுவன செயல் இயக்குனர் திருமுருகன், உதவி மேலாளர் சாமுவேல் எபினேசர், திட்ட அலுவலர் பி.பிரபாகர், மக்கள் தொடர்பு அலுவலர்மகேஸ்வரன் உட்பட ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai in future agriculture