மதுரை மாநகராட்சியில் வளர்ச்சிப் பணிகள்: மேயர், ஆணையர் ஆய்வு
வண்டியூர் கண்மாயினை அழகுபடுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை ஆய்வு மேற்கொண்ட மேயர்
தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பின்படி, வண்டியூர் கண்மாயினை அழகுப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் பணிக்காக அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்பு நிதியின் கீழ் ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கண்மாயில் படகுசவாரி வசதிகள் ஏற்படுத்துதல், கண்மாயின் மேற்குப்புறம் மற்றும் வடபுறத்தில் இருசக்கர மிதிவண்டி பாதை அமைத்தல், நடைபயிற்சி பாதை அமைத்தல், யோகா மையம், தியான மையம், சிற்றுண்டி, சிறிய நூலகம், குழந்தைகள் மற்றும் முதியோர் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய விளையாட்டு உபகரணங்கள், செயற்கை நீருற்று, ஆம்பி தியேட்டர், ஸ்கேட்டிங் தளம், கராத்தே பயிற்சி மையம், இறகு பந்து மைதானம், வாகன நிறுத்துமிடம், நவீன கழிப்பிடம், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் பூங்காக்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட உள்ளது.
அதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை, மேயர் இந்திராணி பொன்வசந்த், ஆணையாளர் ஜே.பிரவீன்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். முன்னதாக, திடீர்நகர் மேலவாசல் பகுதியில் அம்ரூத் திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்டு வரும் குடிநீர் மேல்நிலைத் நீர்த் தேக்கத் தொட்டியின் கட்டுமான பணிகள், கட்டுமான பணிக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் தரம் குறித்தும் , மேயர், ஆணையாளர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
மதுரை மாநகராட்சி சுந்தரராஜபுரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை, மேயர் இந்திராணி பொன்வசந்த், ஆணையாளர் ஜே.பிரவீன்குமார், ஆகியோர் வழங்கினார்கள்.
மதுரை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவிகளுக்கு 2023 ஆம் ஆண்டுக்குரிய தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டது. வெள்ளிவீதியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, காக்கைபாடினியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பொன்முடியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பழங்காநத்தம் நாவலர் சோமசுந்தர பாரதியார் மேல்நிலைப்பள்ளி, திரு.வி.க.மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, கஸ்தூரிபாய் காந்தி மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஈ.வெ.ரா.மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பாரதிதாசனார் மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு பயிலும் 1828 மாணவ, மாணவிகளுக்கு, தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக, சுந்தரராஜபுரம் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 95 மாணவ, மாணவிகளுக்கும், பாண்டியன் நெடுஞ்செழியன் மேல்நிலைப்பள்ளியில் 71 மாணவ, மாணவிகளுக்கும், சேதுபதி பாண்டித்துரை மேல்நிலைப்பள்ளியில் 34 மாணவர்களுக்கும் என, மொத்தம் 200 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை, மேயர் இன்று வழங்கினார்.
இந்நிகழ்வில் துணை மேயர் தி.நாகராஜன், மண்டலத் தலைவர்கள் பாண்டிச்செல்வி, சரவணபுவனேஸ்வரி, கல்விக்குழுத் தலைவர் விச்சந்திரன், கண்காணிப்பு பொறியாளர் அரசு, நகரப் பொறியாளர் ரூபன் சுரேஷ், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன் அலுவலர் நாகேந்திரன், உதவிப்பொறிய.அமர்தீப், சுகாதார அலுவலர் வீரன், சுகாதார ஆய்வாளர் ரமேஷ், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாநகராட்சி அலுவலர்கள், மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu