மதுரை தமுக்கம் மைதானம் சீரமைக்கும் பணியை மேயர் இந்திராணி ஆய்வு

மதுரை தமுக்கம் மைதானம் சீரமைக்கும் பணியை மேயர் இந்திராணி ஆய்வு
X

மதுரை தமுக்கம் மைதானத்தில் நடந்து வரும் பணிகளை மேயர் இந்திராணி ஆய்வு செய்தார்.

மதுரை தமுக்கம் மைதானம் சீரமைக்கும் பணியை மேயர் இந்திராணி ஆய்வு செய்தார்.

மதுரை மாநகரில் அமைந்துள்ள தமுக்கம் மைதானம் தொழில் மற்றும் வர்த்தக ரீதியாக தென் மாவட்டங்களை இணைக்கும் மையமாக திகழ்கின்றது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கலையரங்கத்தினை ரூ.47.72 கோடி மதிப்பில் நவீன வசதிகளுடன் விரிவாக்கம் செய்து, கலாச்சார மையமாக மாற்றியமைக்க திட்டமிடப்பட்டு கீழ் தளத்தில் 240 நான்கு சக்கர வாகனங்களும், 215 இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையிலும், மேலும் தொழில் மற்றும் வர்த்தக ரீதியாக பொருட்காட்சி நிகழ்ச்சிகள் சுமார் 3500 நபர்கள் பங்கு பெறும் வகையில் நவீன வசதிகளுடன் அரங்கமும், சுமார் 800 நபர்கள் ஒரே நேரத்தில்அமர்ந்து உணவருந்தும் வகையில் உணவகமும் மற்றும் இதர அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் வகையில் இறுதிகட்ட கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றது.

மேலும், தமுக்கம் மைதானம் எதிரில் உள்ள வாகன காப்பகத்தை தற்போது சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் அறிவுசார் நூலகம் கட்டப்பட்டு வரும் பணிகளை மேயர் இந்திராணி, ஆணையாளர் கார்த்திகேயன், துணை மேயர் நாகராஜன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

இக்கட்டிடத்தின் தரை தளத்தில் பொது வாசிப்பு அறைகள், புத்தக அலமாரிகள், சிறுவர்களுக்கென தனி பகுதி, முதல் தளத்தில் பயிற்சி மையம் உள்ளிட்ட பல்வேறு உட்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்த ஆய்வில், நகரப்பொறியாளர் (பொ) அரசு,அரசு, உதவி செயற்பொறியாளர்சேகர், மக்கள் தொடர்பு அலுவலர்மகேஸ்வரன், உதவிப்பொறியாளரஆரோக்கிய சேவியர், சுகாதார அலுவலர் வீரன், மாமன்ற உறுப்பினர் வே.முருகன் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி