மதுரையில் நமக்கே நாம் திட்டம் தொடக்க விழா
பள்ளி வகுப்பறை கட்டிடத்திற்கான பூமி பூஜை, மேயர் தலைமையில் நடைபெற்றது
மதுரை மாநகராட்சி மண்டலம் 4 வார்டு எண்.29 செல்லூர் கைலாசபுரம் மாநகராட்சி ஆரம்ப பள்ளியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் தனிநபர் முழுபங்களிப்புடன் ரூ.71.45 லட்சம் மதிப்பீட்டில் கூடுதலாக கட்டப்பட உள்ள பள்ளி வகுப்பறை கட்டிடத்திற்கான பூமி பூஜை மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் நடைபெற்றது.
மதுரை மாநகராட்சியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் நீர்நிலைகள் புனரமைத்தல், பூங்காக்கள் அமைத்தல், பொழுது போக்கு மற்றும் விளையாட்டு வசதிகள் ஏற்படுத்துதல், மரக்கன்றுகள் நடுதல், பள்ளிக்கூடங்கள் மேம்படுத்துதல், பொதுசுகாதார மையம் அமைத்தல், கற்றல் மையங்கள் உருவாக்குதல், சாலைகள் மற்றும் தெருவிளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை தனியார் மற்றும் அரசு பங்களிப்புடன் செயல்படுத்துவதற்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மண்டலம்-4 வார்டு 29 செல்லூர் கைலாசபுரத்தில் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் சுமார் 111 மாணவ-மாணவிகள் பயின்று வருகிறார்கள். இப்பள்ளியின் மாணவ, மாணவிகள் படிப்பதற்கு வசதியாக கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டு நமக்கு நாமே திட்டத்தின் கீழ் தனிநபர் முழு பங்களிப்புடன் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜையை, மேயர் துவக்கி வைத்தார்.
புதிதாக கட்டப்படும் இப்பள்ளியில் தரைதளம் மற்றும் முதல்தளத்தில் நான்கு பள்ளி வகுப்பறைகளும், மாணவ, மாணவிகளுக்கு தனித்தனி கழிப்பறைகளும், உணவு அருந்தும் அறையும், பள்ளியை சுற்றி பேவர் பிளாக் தரைதளமும் மற்றும் ஆழ்துளை கிணறு வசதிகளும் அமைக்கப்பட உள்ளது.
மேலும், இப்பள்ளிக்கு நிதி வழங்கிய தனிநபர் பங்களிப்பாளர் ஏற்கனவே, மாநகராட்சி திரு.வி.க மேல்நிலைப்பள்ளியின் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கு ரூ.1.10 கோடி நிதி வழங்கி உள்ளார்.
தொடர்ந்து, மதுரை மாநகராட்சி மண்டலம் 4 வார்டு எண்.43 ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் தெரு, இஸ்மாயில் புரம் 12வது தெரு, சுடலைமுத்துப்பிள்ளை சந்து, காதர்கான் பட்லர் தெரு, கொண்டித் தொழுத் மெயின் தெரு மற்றும் கொண்டி தொழு வடக்கு தெரு உள்ளிட்ட ஏழு தெருக்களில் தொகுப்பு 11 ன் கீழ் ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக தார்சாலை அமைக்கும் பணியினை, மேயர் , நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மண்டலம் 2 வார்டு எண்.28 எப்.எப்.ரோடு பந்தல்குடி பகுதியில் புதிய உபகழிவுநீரேற்று நிலையம், கோரிப்பாளையம் ஜம்புராபுரம் மார்கெட்டில் செயல்படும் கடைகளை புனரமைப்பு மற்றும் தற்காலிக மராமத்து பணிகள், ஜம்புராபுரம் மெயின் சாலையில் உள்ள மாநகராட்சி காலி இடத்தில் புதிய சமுதாயக் கூடம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையக் கட்டிடத்தில் புதிய சத்துணவுக்கூடம் மற்றும் மராமத்து பணிகள், கோரிப்பாளையம் பள்ளிவாசல் மெயின் சாலையில் புதிய சாலைகள் அமைப்பதற்கும் என, பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்வது குறித்து , மேயர் ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிகழ்வில், துணை மேயர் தி.நாகராஜன், துணை ஆணையாளர் முஜிபூர் ரகுமான், மண்டலத் தலைவர் முகேஷ்சர்மா, கல்விக்குழுத் தலைவர் ரவிச்சந்திரன், நகரப்பொறியாளர் அரசு, உதவி ஆணையாளர்கள் திருமலை வரலெட்சுமி மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவி செயற்பொறியாளர்கள் மயிலேறிநாதன், காமராஜ், உதவி பொறியாளர்கள் சந்தனம் ,பொன்மணி சுகாதார அலுவலர் சிவசுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளர் சுப்புராஜ், மாமன்ற உறுப்பினர்கள் லோகமணி, உமா, பங்களிப்பாளர் தங்க திருப்பதி விலாஸ் உரிமையாளர் டி.பி.ராஜேந்திரன், உட்பட மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu