மதுரையில் நகைக்கடைகளில் திருடியவர் கைது: நகைகள் மீட்பு

மதுரையில் நகைக்கடைகளில் திருடியவர் கைது:   நகைகள் மீட்பு
X
மதுரையில் நகைக்கடையில் திருடியவரை கைது செய்த போலீஸார் அவரிடமிருந்து 9 பவுன் நகையை மீட்டனர்

நகை கடைகளில் ,நகை வாங்குவது போல வந்து அங்கு வேலை பார்ப்பவர்களின் கவனத்தை திசை திருப்பி நகைகளை திருடிய நபரை கைதுசெய்து அவரிடமிருந்த 9 பவுன் தங்கநகைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

மதுரை அண்ணாநகர், விளக்குத்தூண், தெற்குவாசல் ஆகிய பகுதிகளில் உள்ள நகை கடைகளில் நகை வாங்குவது போல கடைக்கு சென்று கடையில் வேலை பார்ப்பவர்களின் கவனத்தை திசை திருப்பி நகைகளை திருடும் சம்பவம் தொடர்ந்து நடந்து வந்தது.

இந்நிலையில் குற்றவாளிகளை கண்டறிய மதுரை மாநகர் காவல் ஆணையர் செந்தில் குமார் உத்தரவின் பேரில் ,காவல் துணை ஆணையர் (வடக்கு) இராஜசேகரன் நேரடி பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அண்ணாநகர் சரக காவல் உதவி ஆணையர் சூரக்குமார் மற்றும் காவல் ஆய்வாளர் அனுராதா தலைமையில் தனிப்படையினர், குற்றச் செயல்களில் தொடர்புடைய குற்றவாளிகளை தேடிவந்த போது கோ.புதூரை சேர்ந்த அரவிந்த்(22) , என்பவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் கடைகளில், நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டார் அவரிடம் இருந்து சுமார் ரூபாய்.3,53,000/- மதிப்புள்ள 9 - பவுன் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டது.

இந்த குற்ற வழக்குகளில் சிசிடிவி கேமராக்கள் உதவியுடன் பதிவுகளைபார்த்து, கைதுசெய்து தங்கநகைகளை மீட்ட தனிப்படை சார்பு ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் முதல் நிலை காவலர்கள் வெங்கட்ராமன் மற்றும் முத்துக்குமார் மற்றும் லெட்சுமணன். ஆகியோர்களை மதுரை மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார் மற்றும் காவல் துணை ஆணையர் (வடக்கு) இராஜசேகரன் பாராட்டினார்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil