அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையில் கரும்பு ஆரவையைத் தொடங்க விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையில் கரும்பு ஆரவையைத் தொடங்க விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
X

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கத்தினர்.

அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவையை தொடங்கக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையில், கரும்பு ஆரவையைத் தொடங்கக் கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

முன்னதாக, கரும்பு விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் பேசுகையில், கரும்பு விவசாயிகள் 1850 ஏக்கரில் கரும்பு பயிர் செய்துள்ளனர். பதிவு செய்துள்ள கரும்பை, பிற ஆலைகளுக்குக் கொண்டு செல்லக் கூடாது.

விரைவில் மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் தேசியக் கூட்டுறவு சர்க்கரை ஆலையில், கரும்பு ஆரவையைத் தொடங்க வேண்டும் எனக் கரும்பு விவசாயிகள் கோஷமிட்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!