மதுரையில் தேவர், மருதுபாண்டியர் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை

மதுரையில் தேவர், மருதுபாண்டியர் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை
X

கோரிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் முழு உருவ சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மதுரையில் தேவர் மற்றும் மருதுபாண்டியர் சிலைகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மதுரையில் தேவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி, மற்றும் குருபூஜையை முன்னிட்டு இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் முத்துராமலிங்கத்தேவர் சிலை மற்றும் மருதுபாண்டியர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மதுரையில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் கீழடியில் நடைபெற்றுவரும் ஆய்வு பணிகளை பார்வையிட்டார். அதன்பின் நேற்று மதுரை அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த இன்று காலையில் கோரிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்தார்.

அதன்பின் தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருது சகோதரர்கள் சிலைக்கு மாலை அணிவித்தார். அதன்பின் முதல்வர் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் மரியாதை செய்வதற்காக கிளம்பிச் சென்றார். அவருடன் அமைச்சர்கள், ஐ.பெரியசாமி, தங்கம் தென்னரசு, பி.டி. ஆர். பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, பெரியகருப்பன், கே.கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரன், கீதா ஜீவன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஏராளமானோர் உடன் சென்றனர்

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு