மதுரை மாநகராட்சியில் பணி நியமனம்: ஆணையர் அறிவிப்பு
மதுரை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு பணிக்கு தொகுப்பூதிய அடிப்படையில் பணி நியமனம் நடைபெறுவதாக ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
மதுரை மாநகராட்சி பகுதிகளில் கொரோனா 19 தீவிர தடுப்பு பணியை முன்னிட்டும் அவசர அவசியம் கருதியும், கோவிட் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், கோவிட் கவனிப்பு முகாம், கோவிட் காய்ச்சல் முகாம் மற்றும் கோவிட் பரிசோதனை முகாம்களில் தொகுப்பூதியத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஒரு மாதத்திற்கும் தேவைப்படின் மூன்று மாதங்களுக்கு நீட்டித்தும் முற்றிலும் தற்காலிகமாக பணிபுரிவதற்கு விருப்பமுள்ள கீழ்க்கண்ட தகுதியுடையவர்கள் மாநகராட்சியின் மைய அலுவலகத்தில் நகர்நல அலுவலரிடம் தங்களது விபரங்களை நேரடியாக முறையில் வந்து 08.01.2022 மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பணி-கல்வித்தகுதி-தேவையான நபர்கள்- ஊதியம் மாதம் ஒன்றிற்கு..
1. அலோபதி மருத்துவர்கள்: எம்.பி.பி.எஸ். 25 பேர்- ரூ.60,0000.
2. ஆயுஷ் மருத்துவர்கள்: பி.ஹெச்.எம்.எஸ். பி.எஸ்.எம்.எஸ். பி.ஏ.எம்.எஸ். 25 பேர்- ரூ.30000
3. ஆய்வக நுட்புனர்: டி.எம்.எல்.டி. பி.எஸ்.சி. எம்.எல்.டி. 35பேர். ரூ.15000
4. செவிலியர்கள்: பி.எஸ்.சி. நர்ஸிங் டிப்ளமோ நர்ஸிங்- 50பேர்- ரூ.14000
மேற்படி பணிகள் முற்றிலும் தற்காலிகமானது. பிற்காலத்தில் பணிநிரந்தரம் அல்லது வேறு சலுகைகள் கோர இயலாது என மாநகராட்சி ஆணையாளர் கா.ப.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu