திமுக அரசைக் கண்டித்து மதுரை, நிலக்கோட்டை பகுதியில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
மதுரை அருகே பரவை பகுதியில் செல்லூர் ராஜூ தலைமையில் அதிமுகவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குஜராத்தை தொடர்ந்து, நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக வெற்றிபெற அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் தான் முடியும் என்றார் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ.
தமிழகத்தில் சொத்துவரி உயர்வு, விலைவாசி, பால் விலை உயர்வு, மின்கட்டண உயர்வு ஆகியவற்றை திமுக அரசு உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை பரவை பகுதியில், செல்லூர் ராஜூ தலைமையில் அதிமுகவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் செல்லூர் ராஜூ பேசியதாவது: குஜராத்தை பொருத்தவரை அமித்ஷா, பிரதமர் மோடி ஆகியோரது உள்ள சொந்த மாநிலம். ஆகவே அவர்களுக்கு அப்பகுதி மக்கள் வாக்களித்துள்ளனர். காசியில் தமிழ் பற்றி பேசியதால் அப்பகுதி தமிழர்கள் அவர்களுக்கு வாக்களித்துள்ளனர். எனினும் கூட்டணி அமைவதை பொறுத்தேதான் பாஜக வெற்றி பெறும்.
தமிழகத்தில், பாஜக வளர்ந்து வருகிற கட்சி அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் மட்டுமே தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெறும். அது பாஜக கையில்தான் உள்ளது. தேர்தல் நேரத்தில்தான் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும். கோவை செல்வராஜ் ஏற்கனெவே காங்கிரசில் இருந்தார். பின்னர், இப்போது திமுகவில் சேர்ந்துள்ளார். அவர், அடிக்கடி கட்சிமாறுவார் அது அவரது விருப்பம் அதிமுகவிலிருந்து கட்சி மாறியவர்கள் கூட திமுகவில் தற்போது அமைச்சர்களாக உள்ளனர் கட்சி மாறியவர்கள் குறித்து பேச விரும்பவில்லை என்றார் செல்லூர் ராஜூ.
நிலக்கோட்டையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்:
தமிழக அரசு உயர்த்தியுள்ள சொத்துவரி, மின்கட்டண உயர்வைக் கண்டித்து நிலக்கோட்டை பஸ்நிலையம் அருகே அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சர் நத்தம் ஆர். விஸ்வநாதன் ஆலோசனையின் பேரில், நிலக்கோட்டை நகர அதிமுக சார்பில், எம்.எல்.ஏ. தேன்மொழி, முன்னாள் எம்.பி. உதயக்குமார், நிலக்கோட்டை கிழக்கு ஓன்றியச் செயலாளர் பி. யாகப்பன், மேற்கு ஓன்றியச் செயலாளர் எம்.கே. நல்லதம்பி, நிலக்கோட்டை நகர அதிமுக செயலாளர் சேகர், அம்மையநாயக்கனூர் நகரச் செயலாளர் ஆர். தண்டபாணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் மாவட்டக் கவுன்சிலர் பாலசுப்பிரமணியம் மற்றும் அதிமுக நிர்வாகிகள், திமுக அரசைக் கண்டித்து கோஷமிட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu