மதுரை மாநகராட்சி பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்ட பூமி பூஜை

மதுரை மாநகராட்சி பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்ட பூமி பூஜை
X

வெள்ளிவீதியார் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டட பூமிபூஜையின் போது

மதுரை மாநகராட்சி வெள்ளிவீதியார் மேல்நிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் நடைபெற்றது

மதுரை மாநகராட்சி வெள்ளிவீதியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், தனியார் பங்களிப்புடன் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை , மேயர் இந்திராணி பொன்வசந்த், ஆணையாளர் கே.ஜே. பிரவீன் குமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

மதுரை மாநகராட்சி மண்டலம் 3 வார்டு எண்.56 ஆரப்பாளையம் கிராஸ் ரோடு பகுதியில் உள்ள மாநகராட்சி வெள்ளிவீதியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் படிக்கும் மாணவிகளின் வசதிக்காக தனியார் பங்களிப்பு ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதற்கான பூமி பூஜை, மேயர் தலைமையில் தொடங்கி வைத்து பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

தொடர்ந்து, மண்டலம் 4 வார்டு எண்.29 செல்லூர் காவல் நிலையம் எதிரில் உள்ள அய்யனார் கோவில் தெருவில் ரூ.2.10 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாமன்ற உறுப்பினர் அலுவலகம் கட்டிடம், மண்டலம் 2 வார்டு எண்.23 செல்லூர் 60 அடி ரோடு கிராம நிர்வாக அலுவலகம் அருகில் மணவாளன் நகர் மெயின் ரோடு பகுதியில் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10.90 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளபுதிய நியாய விலை கடை கட்டிடம் ஆகிய கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டதை, மேயர் நேரில் பார்வையிட்டார்.

இந்நிகழ்வில், வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி, பட்டிமன்ற நடுவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா, துணை மேயர் நாகராஜன் , மண்டலத் தலைவர் பாண்டிச்செல்வி, துணை ஆணையாளர் சரவணன், கல்விக்குழுத் தலைவர் ரவிச்சந்திரன், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், மாமன்ற உறுப்பினர்கள் ஜென்னியம்மாள், லோகமணி, குமரவேல், உதவிப்பொறியாளர்கள், சுகாதார அலுவலர்கள் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai in future agriculture