மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் தேசிய ஒருமைப்பாடு உறுதிமொழி ஏற்பு

மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் தேசிய ஒருமைப்பாடு உறுதிமொழி ஏற்பு
X

மதுரை மாநகராட்சி அலுவலகத்தில்  ஆணையாளர் கா.ப.கார்த்திகேயன் தலைமையில்  தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி ஏற்பு 

நாட்டின் சுதந்திரம் ஒருமைப்பாடு ஆகியவற்றைக் காக்கவும், வலுப்படுத்தவும் அர்ப்பணித்துச் செயல்படுவேன் என உறுதி ஏற்றனர்

மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி ஆணையாளர் கா.ப.கார்த்திகேயன் தலைமையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

நாட்டின் சுதந்திரம் ஒருமைப்பாடு ஆகியவற்றைக் காக்கவும், வலுப்படுத்தவும் என்னை அர்ப்பணித்துச் செயல்படுவேன் என்று மனமார உறுதி கூறுகிறேன். நான் ஒரு போதும் வன்முறையில் ஈடுபடமாட்டேன் என்றும் மதம், மொழி, வட்டாரம் மற்றும் அரசியல் அல்லது பொருளாதார பேதங்களுக்கு அமைதியான முறையிலும் அரசியல் சட்டத்திற்குட்பட்டும் தீர்வுகாணத் தொடர்ந்து பாடுபடுவேன் என்றும் நான் மேலும் உறுதி கூறுகிறேன் என்று ஆணையாளர்வாசிக்க, அனைவரும் வாசித்து உறுதி எடுத்துக் கொண்டனர்.

இதே போன்று மண்டல அலுவலகங்களில் மண்டல உதவி ஆணையாளர்கள் தலைமையில் மண்டலத்தில் பணிபுரியும் அலுவலர்கள், ஊழியர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.இந்நிகழ்ச்சியில், துணை ஆணையாளர் சங்கீதா, உதவி ஆணையாளர் (வருவாய்)ரெங்கராஜன், உதவி ஆணையாளர் (கணக்கு) சுரேஷ்குமார், கல்வி அலுவலர் ஆதிராமசுப்பு, உதவி செயற்பொறியாளர் (திட்டம்) சுப்புதாய், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பிளாஸ்டிக் பைகள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி..!