மனைவி தூக்குப்போட்டு தற்கொலை: கணவர் புகார் மீது போலீஸார் விசாரணை

மனைவி தூக்குப்போட்டு தற்கொலை: கணவர் புகார் மீது போலீஸார் விசாரணை
X

பைல் படம்

மன உலைச்சலில் இருந்து வந்தவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை‌ செய்து கொண்டார்

தீராத வயிற்று வலியால் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை:

மதுரை, இந்திரா நகர், அய்யனார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாண்டீஸ்வரி( 45). இவர், தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்த நிலையில் அதற்காக இதற்கான சிகிச்சையும் பெற்றுவந்தார். ஆனாலும், குணமடையாததால், மன உலைச்சலில் இருந்து வந்த பாண்டீஸ்வரி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை‌ செய்து கொண்டார். இது குறித்து, கணவர் பூவலிங்கம், கொடுத்த புகாரில், அண்ணாநகர் போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடி போதையில் மனைவியுடன் தகராறு:கணவர் தூக்குப்போட்டு தற்கொலை

மதுரை, எல்லீஸ் நகர், போடி லயனைச் சேர்ந்தவர் சத்தியேந்திரன்( 49).இ வருக்கு குடிப்பழக்கம் இருந்தது. தினமும் குடித்துவிட்டு, வீட்டுக்கு வருவது வழக்கமாக இருந்து வந்தது.இதை மனைவி கண்டித்ததால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், முடைந்த சத்யேந்திரன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்த கொண்டார். இது குறித்து, மனைவி ராமலெட்சுமியின் புகாரில், எஸ.எஸ்.காலனி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உடல்நலக்குறைவால் மனமுடைந்து வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை:

மதுரை, சுப்பிரமணியபுரம் நான்காவது தெருவை சேர்ந்தவர் ஹக்கிம்ராஜா(31). இவர், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். அதற்கான சிகிச்சையும் பெற்றுவந்தார்.ஆனாலும், தொடர்ந்து பாதிப்பு குறையவில்லையாம். இதனால், மனமுடைந்து காணப்பட்டார். இதைத் தொடர்ந்து, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து, தாயார் நபியாபேகம் கொடுத்த புகாரில், ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசானணை நடத்திவருகின்றனர்.

காமராசர்புரத்தில், பெண்ணிடம் கந்து வட்டி கேட்டு மிரட்டல்: 3பேர்மீது வழக்குப் பதிவு :

மதுரை, காமராசர்புரம், இந்திராநகரை சேர்ந்தவர் வில்லம்மாள்( 42) . இவர், காமராசர்புரம் சத்யா என்பவரிடம் ரூ.80,000 -வட்டிக்கு கடன் வாங்கியிருந்தார்.இந்த தொகைக்கு, ஒவ்வொரு மாதமும் எட்டாயிரம் வட்டி கட்டிவந்துள்ளார்.பின்னர், கொரோனா காலத்தில் வட்டி கட்டுவதில் தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் , கடன் கொடுத்த சத்யா மற்றும் முனியசாமி, சிவா ஆகியோர் சேர்ந்து கூடுதல் வட்டி கேட்டு வில்லம்மாளை ஆபாசமாக திட்டியும் மிரட்டியும் உள்ளனர்.இந்த சம்பவம் குறித்து, வில்லம்மாள் விளக்குத்தூண் போலீசில் புகார் செய்தார்.கந்து வட்டி தடுப்புச் சட்டதின்கீழ், போலீசார் வழக்குப் பதிவுசெய்து, சத்யா,முனியசாமி, சிவா மூவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கூடல் புதூரில் வாலிபர் பீர் பாட்டிலால் தாக்குதல்:

மதுரை அருகே, எஸ்.ஆலங்குளம் இமயம் நகர் நான்காவது தெருவைச் சேர்ந்தவர் ராஜேஸ்கண்ணன்( 24). இவரது , உறவினர் நவீன் மற்றும் நண்பர்களுடன், இமயம் நகர் ஒன்றாவது தெருவில் பேசிக் கொண்டிருந்தார்.அப்போது, அங்கு வந்த ராஜேஸ்கண்ணாவுக்கு ம் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.இந்த சம்பவத்தில், ஆத்திரமடைந்த நவீன் தரப்பினர், பீர்பாட்டிலால் ராஜேஸ்கண்ணாவை தாக்கிவிட்டு ஓடிவிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக, கூடல்புதூர் போலீசார் வழக்குப் பதிவுசெய்து பீர்பாட்டிலால் தாக்கிய மூவரையும் தேடிவருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!