மதுரை நகர பல்வேறு குற்றச் செய்திகள்

மதுரை நகர பல்வேறு குற்றச் செய்திகள்
X
மதுரை நகரில் காவல் நிலையங்களில், நடைபெற்ற குற்ற சம்பவங்கள்

குளிக்கச்சென்ற வாலிபர் பாத்ரூமில் வழுக்கி விழுந்து பலி:

மதுரை காமராஜபுரம் குமரன் குறுக்கு தெருவை சேர்ந்தவர் கார்த்திக் 32. இவர் வீட்டில் பாத்ரூமில் குளிக்க சென்றபோது, வழுக்கி விழுந்து விட்டார். இந்த சம்பவத்தில் தலையில் பலமாக அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். இவரது சாவு குறித்து, கீரைத்துரை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை தல்லாகுளத்தில் கணவர் தற்கொலை மனைவி புகார் போலீஸ் விசாரணை:

மதுரை உச்சபரம்பு மேடு ஸ்ரீசக்ரா நகர் விரிவாக்கபகுதியை சேர்ந்தவர் சுந்தரேசன் 57 .இவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர், அதிகாலை வாயில் நுரை தள்ள இறந்துகிடந்தார். இது தொடர்பாக, மனைவி சித்ரா தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு ப் பதிவு செய்து சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டூவீலரில் சென்ற பெண்ணிடம் 14 பவுன் செயின் பறிப்பு பின்தொடர்ந்த பைக்ஆசாமிகள் கைவரிசை:

தெப்பகுளம் பகுதியில் இரு சக்கர வாகனம் ஓட்டிச்சென்ற பெண்ணிடம் நகை பறித்த பைக்ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். மதுரை பழைய குயவர்பாளையம்ரோடு பகுதியில் வசிப்பவர் ஜெயந்தி 59. இவர் டூவீலரில், அந்தோனிமூப்பனார் தெருவழியாக சென்றபோது , அவரை பின்தொடர்ந்து வந்த ஆசாமிகள் அவர் அணிந்திருந்த பதினான்கு பவுன் தங்கசங்கிலியை பறித்துச்சென்று விட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக, தெப்பக்குளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து பைக் ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

மதுரை செல்லூரில் கஞ்சா விற்பனை செய்த பெண் கைது

மதுரை செல்லூர் பாலம் ஸ்டேசன்ரோடு பகுதியை சேர்ந்தவர் ஒச்சம்மாள் 52. இவர் அந்தப் பகுதியில் கஞ்சா விற்பனை செய்தபோது, செல்லூர் போலீசார் அவரை கைது செய்தனர்‌. அவரிடமிருந்து, ஒருகிலோ முன்னூறு கிராம் கஞ்சாவையும் விற்பனை செய்த பணம் ரூபாய் நான்காயிரத்தையும் பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!