தக்காளி விலை சரிவு: வேதனையில் செடிகளிலேயே பறிக்காமல் விட்ட விவசாயிகள்

தக்காளி விலை சரிவு: வேதனையில்  செடிகளிலேயே பறிக்காமல் விட்ட விவசாயிகள்
X

கிருஷ்ணகிரி மாவட்டத்தில்,  தக்காளி விலை கடுமையான வீழ்ச்சியடைந்துள்ளதால், பறிக்காமல் செடிகளிலேயே அவை அழுகி வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விலை கடுமையான வீழ்ச்சியடைந்ததால், பறிக்காமல் செடிகளிலேயே தக்காளிகள் அழுகி வருகின்றன.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார், 5000 ஏக்கருக்கும் மேல் ஏக்கர் பரப்பளவில் தக்காளி பயிரிடப்பட்டுள்ளது. கடந்த மாதங்களில் நல்ல விலைக்கு விற்று வந்த தக்காளி, கடந்த சில வாரங்களாக இறங்குமுகத்தில் உள்ளது. தற்போது தக்காளி விலை 7 ரூபாய்க்கும் கீழ் சென்று விட்டதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தின்னக்கழனி, மலைச்சந்து, பெல்லம்பள்ளி, பாலகுறி, மாதேப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தக்காளி பரவலாக பயிரிடப்பட்டுள்ளது. இங்கு பயிரிடப்பட்டுள்ள தக்காளிகளை விலை வீழ்ச்சியால், அவற்றை விவசாயிகள் அறுக்காமல் செடிகளிலேயே விட்டுள்ளனர். பல பகுதிகளில் செடிகளிலேயே தக்காளி அழுகி வரும் அவலம் ஏற்பட்டுள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!