சூளகிரி அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: 2 பேர் பலி

சூளகிரி அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: 2 பேர் பலி
X

சூளகிரி அடுத்த கிருஷ்ணகிரி ஓசூர் தேசிய நெடுஞ்சாலை பெட்ரோல் பங்க் அருகே , இன்று காலை கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில்ம் இரண்டு பேர் பலியாயினர்

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே, ஓசூர் தேசிய நெடுஞ்சாலை எச் பி பெட்ரோல் பங்க் அருகே, இன்று காலை பெங்களூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி வந்த கார் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து, நிலைதடுமாறி எதிரே வந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இரண்டு கார்களும் மோதிக்கொண்டதில், அப்பளம் போல் நொறுங்கியது. இதில், காரில் இருந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சூளகிரி போலீசார், தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தால் ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பை சீர் செய்தனர்.

விபத்தில், இறந்தவர்கள் கர்நாடக மாநிலம் பெங்களூர் பகுதியை சேர்ந்த சுமந்த், வின்செண்ட் கோபி என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்