வேப்பனஹள்ளி அருகே இரு தரப்பினர் இடையே மோதல்: 4 பேர் மீது வழக்கு

வேப்பனஹள்ளி அருகே இரு தரப்பினர் இடையே மோதல்: 4 பேர் மீது வழக்கு
X

சித்தரிக்கப்பட்ட படம்

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே இரு தரப்பினருக்கு இடையே நடந்த மோதலில், 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே உள்ள திம்மசந்திரத்தைச் சேர்ந்தவர் முருகன்(38). விவசாயி. ஜோடுகொத்தூரை சேர்ந்தவர் நாகராஜ். இவரும் உறவினர்கள். இவர்களுக்குள் குடும்ப பிரச்சினை இருந்துள்ளது. சம்பவத்தன்று, காது குத்து விழா ஒன்றில் இரு தரப்பினரும் பங்கேற்றனர். அப்போது ஏற்பட்ட பிரச்சினையில், இரு தரப்பினரும் தாக்கி கொண்டனர்.

இது குறித்து, முருகன் கொடுத்த புகாரில் தனது தரப்பில் தானும், மஞ்சுநாதன் ஆகியோர் காயமடைந்ததாக கூறியுள்ளார். அதன் பேரில் வேப்பனஹள்ளி போலீசார் ஜோடுகொத்தூரை சேர்ந்த நாகராஜ், ராஜா(35) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அதேபோல நாகராஜ் தரப்பில் ஒரு புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் தனது தரப்பில் தானும், ராஜாவும் தாக்கப்பட்டதாக கூறியுள்ளார். அதன் பேரில் போலீசார் முருகன், மஞ்சுநாதன், ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!