வேளாண்மை துறை சார்பில் பேரிடர் கால தொடர்பு எண்கள் அறிவிப்பு

வேளாண்மை துறை சார்பில்  பேரிடர் கால தொடர்பு எண்கள் அறிவிப்பு
X
வேளாண்மை துறை சார்பில், கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி வட்டாரத்தில், பேரிடர் காலத்தில் தொடர்பு கொள்ள செல்போன் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கொரோனா ஊரடங்கு காரணமாக, விவசாயிகளை நேரடியாக வேளாண்மை துறையினரை சந்திக்க முடியாத நிலை கருதி, அந்தந்த பகுதிகளுக்கான உதவி வேளாண்மை அலுவலர்களின் பெயர்கள் மற்றும் தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, வேப்பனஹள்ளி சந்திரசேகர்- 9080702721, நாச்சிகுப்பம் சுப்பிரமணி - 8695866699, தீர்த்தம் செல்வம் - 7667464161, குந்தாரப்பள்ளி நரேந்திரன் - 8668051807 குருபரப்பள்ளி தேவராஜ் - 9600755151 ஆகியோரிடம் சந்தேகங்களை கேட்டு தகவல் பெறலாம்.

விவசாயிகள் தங்கள் பகுதியில் பயிரிட்டுள்ள பயிர்கள், விவசாயிகளுக்கு தேவைப்படும் விதைகள் மற்றும் இடுபொருட்கள் சம்மந்தமான தகவல்களை பூர்த்தி செய்யும் பொருட்டு அந்தந்தப் பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என வேளாண்மை துறை அறிவித்துள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!