அரசு நிர்ணயித்த விலைக்கே கரும்பு கொள்முதல் செய்ய வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை
கிருஷ்ணகிரியில் கரும்பு விவசாயம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியில் சுமார் 100 ஏக்கருக்கு மேல் பனிகரும்பு விவசாயம் செய்துள்ளனர். வருகின்ற பொங்கல் திருநாளில் ரேசன் கார்டு உள்ளவர்களுக்கு 5அடி அளவு கொண்ட ஒரு முழு நீள கரும்பு இலவசமாக வழங்குவதாக அரசு அறித்துள்ளது.
அந்த கரும்புக்கு ரூபாய் 33 விலை நிர்ணயம் செய்து அரசாணை வெளியிட்டு உள்ளது.இந்த நிலையில் ஊத்தங்கரை பகுதியில் வழங்க இருக்கும் கரும்புகளை இந்த பகுதியில் உள்ள விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய வேண்டுமெனவும், மேலும் அரசு நிர்ணயித்துள்ள ஒரு கரும்பிற்கு ரூ.33 முழு தொகையை விவசாயிக்கு வழங்கிட வேண்டுமெனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த நிலையில் அரசு அதிகாரிகள் ஊத்தங்கரை அடுத்த வெள்ளையம்பதி கிராம பகுதியில் சுமார் 50000 கரும்புகள் பயிர் செய்துள்ளதில் 25000 கரும்புகள் மட்டும் விவசாயிகளிடம் கொள்முதல் செய்த உள்ளதாகவும் அதில் ஒரு கரும்புக்கு ரூ.20 முதல் ரூ22 வரை விலை கொடுப்பதாகவும் கூறினர்.
ஆனால் விவசாயிகள் இதற்கு மறுப்பு தெரிவித்தனர். அரசு 5 அடி நீளம் கொண்ட ஒரு கரும்புக்கு ரூ.33 நிர்ணயித்து அரசாணை வெளியிட்ட நிலையில் அதிகாரிகள் அதற்கு குறைவாக விலை கொடுப்பதாக கூறியதால் பனிகரும்பை விவசாயிகள் பெருமளவுக்கு பாதிக்கப்படுவதாகவும் அடுத்தாண்டு கரும்பை பயிர் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்படுவது ஆகும் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
பனிகரும்பை விவசாயம் செய்வதற்கு ஒரு ஏக்கருக்கு ரூ.2 லட்சத்திற்கு மேல் செலவு ஆவதாகவும், ரூ.33 என்ற அளவிற்கு அரசு கொள்முதல் செய்தாலே தாங்கள் செய்த செலவினங்களுக்கு ஈடு செய்ய முடியாது என்றும் அதற்கு குறைவாக அரசு கௌ;முதல் செய்யும் போது மிகபெரிய கடன் சுமைக்கு ஆளாக வேண்டி இருக்கும் என்றும், எனவே அரசு நிர்ணயித்த ரூ.33யை ஒரு கரும்பிற்கு வழங்கிட வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu