கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 2.25 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 2.25 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
X

கைது செய்யப்பட மதீன்.

கிருஷ்ணகிரி அருகே கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 2.25 டன் ரேஷன் அரிசி மற்றும் வேன் பறிமுதல்.

கிருஷ்ணகிரி மாவட்ட உணவுபொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர், இளவரசி, எஸ்.ஐ., முரளி, உள்ளிட்டோர் கிருஷ்ணகிரி–திருவண்ணாமலை சாலையில் இன்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது திருவண்ணாமலை சாலை மேம்பாலம் அருகில் வந்த பொலிரோ வேனை மடக்கி சோதனையிட்டதில், 2,250 கிலோ ரேஷன் அரிசி கடத்தியது தெரியவந்தது. விசாரணையில் ஜெகதேவி உள்ளிட்ட பகுதி பொதுமக்களிடம் ரேஷன் அரிசியை வாங்கி, கர்நாடகாவில் அதிக விலைக்கு விற்று வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து வேனை ஓட்டி வந்த வேப்பனஹள்ளி, மஜீத் தெருவை சேர்ந்த மதீன் என்பவரை கைது செய்து வேன், ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!