மனைவியை அரிவாளால் வெட்டி கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை: மகிளா கோர்ட்

மனைவியை அரிவாளால் வெட்டி கொன்ற  கணவனுக்கு ஆயுள் தண்டனை: மகிளா கோர்ட்
X

ஆயுள் தண்டனை பெற்ற கூலித்தொழிலாளி ரவி.

நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை வெட்டி கொன்ற கூலி தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மகிளா நீதிமன்றம் தீர்ப்பு.

கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டை அடுத்த கேத்துநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரவி, கூலி தொழிலாளி. இவர் மனைவி காமாட்சி. இந்நிலையில் காமாட்சியின் நடத்தையில் சந்தேகப்பட்டு ரவி அடிக்கடி தகராறு செய்துள்ளார். கடந்த 2019ம் ஆண்டு ஏப்.,4 ம் தேதி வீட்டிலிருந்த இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டுள்ளது. மனைவியின் நடத்தை குறித்து தகாத வார்த்தைகளால் திட்டிய ரவி 'நீ இருந்தால் தானே பிரச்னை நீ செத்து விடு' எனக்கூறி அரிவாளால் காமாட்சியை சரமாரியாக வெட்டி கொன்றுள்ளார்.

இதனையடுத்து காமாட்சியின் அண்ணன் ராதாகிருஷ்ணன் அளித்த புகார்படி ரவியை சிங்காரப்பேட்டை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு கிருஷ்ணகிரி மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், வாதங்கள் முடிந்து நீதிபதி லதா தீர்ப்பளித்தார். அதில், குற்றம்சாட்டப்பட்ட ரவிக்கு ஆயுள் தண்டனையும், 1,000 ரூபாய் அபராதமும் விதித்தார். அபராத தொகை செலுத்தாத பட்சத்தில் மேலும் ஆறு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளித்தார். இவ்வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக கலையரசி ஆஜராகி வாதாடினார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!