கடன் தொல்லையால் 25 வயது விவசாயி விஷம் குடித்து தற்கொலை

கடன் தொல்லையால் 25 வயது விவசாயி விஷம் குடித்து தற்கொலை
X
மத்தூர் அருகே அதிக கடன் தொல்லையால் பாதிக்கப்பட்டிருந்த 25 வயது விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த கள்ளியூர் கிராமத்தை சேர்ந்தவர் தமிழரசன். 25 வயது விவசாயியான இவருக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்று ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இவர் குடும்ப செலவிற்காக பல்வேறு இடங்களில் கடன் பெற்றுள்ளார் கடன் கொடுத்தவர்கள் கடனை திருப்பித் தருமாறு கேட்டுள்ளனர்.

இதனால் மனமுடைந்து காணப்பட்ட தமிழரசன் கள்ளியூர் கிராமத்தில் உள்ள மாட்டுக் கொட்டகையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை சுப்பிரமணி கொடுத்த புகாரின் பேரில் மத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!