கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு இதுவரை 3 பேர் பலி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு இதுவரை 3 பேர் பலி
X
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய் தாக்குதல் காரணமாக இதுவரை 3 பேர் பலியாகியுள்ளனர்.

கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் சற்று குறைந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா சுவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதில் இளம் வயதினர், வயதானவர்கள் என ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். உயிர் இழப்பும் அதிகமாக இருந்து வருகிறது.

இந்நிலையில், தற்போது கருப்பு பூஞ்சை நோய் வேகமாக பரவி வருகிறது. இதில் பலரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். உயிர் இழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய் வேகமாக பரவி வருகிறது.

நேற்று வரையில் மாவட்டம் முழுவதும் 67 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 3 பேர் இறந்து விட்டனர். இது குறித்து மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி கூறுகையில், மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோயால் 67 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் கொரோனா வந்தவர்கள் 42 பேரும், கொரோனா இல்லாதவர்கள் 25 பேரும் அடங்குவார்கள்.

இவர்களில் 3 பேர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்துள்ளனர். தற்போது 16 பேர் அரசு மருத்துவமனையிலும், மற்றவர்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என கூறினார்.

Tags

Next Story
ஐயப்பன் மற்றும் கணபதி கோவிலில் புனித குடமுழுக்கு விழா: குவிந்தபக்தர்கள்