கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று முதல் பஸ் போக்குவரத்து

கிருஷ்ணகிரி  மாவட்டத்தில் இன்று முதல் பஸ் போக்குவரத்து
X

கிருஷ்ணகிரி பேருந்து நிலையம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று காலை 6 மணி முதல் வழக்கம் போல் பஸ் போக்குவரத்து தொடங்கியது

கொரோனா ஊரடங்கால் கடந்த மே மாதம் 10ம் தேதி முதல் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தற்போது கொரோனா தாக்கம் குறைந்து வரும் நிலையில் இன்று (28ம் தேதி) கொரோனா இரண்டாவது அலையின் மூன்றாவது கட்ட தளர்வுகள் அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து கொரோனா தொற்று குறைந்துள்ள மாவட்டங்களில் 50 சதவீத பயணிகளுடன் பஸ் போக்குவரத்து துவங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

அதன்படி கொரோனா தொற்று குறைந்த மாவட்டமான கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து, கிருஷ்ணகிரி உட்கோட்ட எல்லைக்குட்பட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் இருந்து இயக்கப்படும் 120 நகர பேருந்துகள், 200 புறநகர் பேருந்துகள் என மொத்தம் 320 பேருந்துகள் இன்று காலை 6 மணி முதல், அந்தந்த பஸ் நிலையத்திற்கு சென்றன.

பயணிகளின் வருகைக்கு ஏற்றார் போல் கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஒசூர், தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய பகுதிகளுக்கு 50 சதவீத பயணிகளுடன் இயக்கப்பட்டு வருகின்றன. நகர பேருந்துகள் அனைத்து அந்தந்த வழித்தடங்களில் இயங்க துவங்கியுள்ளது.

மேலும், அனைத்து பேருந்து நிலையங்களிலும் அவ்வப்போது பேருந்துகளுக்கு கிருமி நாசினி தெளிக்கவும், பொதுமக்கள் கைகளை கழுவ தண்ணீர் தொட்டியும் வைத்து அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சுமார் 50 நாட்களுக்கும் மேலாக பஸ் போக்குவரத்து சேவை இல்லாத நேரத்தில், தற்போது பஸ் போக்குவரத்து துவங்கியுள்ளதால் பயணிகள் தங்கள் ஊர்களுக்கும், அலுவலக பணிகளுக்கும் மிகுந்த ஆர்வத்துடன் பஸ்களில் பயணம் செய்து வருகின்றனர். பயணிகள் வருகையை பொறுத்து கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil