ஓசூரில் கண்காணிப்பு கேமரா அறையை மேற்கு மண்டல ஐ.ஜி., திறந்து வைப்பு

ஓசூரில் கண்காணிப்பு கேமரா அறையை மேற்கு மண்டல ஐ.ஜி., திறந்து வைப்பு
X

ஓசூரில் கண்காணிப்பு கேமரா அறையை திறந்துவைத்த மேற்கு மண்டல ஐஜி.

ஓசூரில் கண்காணிப்பு கேமரா அறையை மேற்கு மண்டல ஐ.ஜி., சுதாகர் இன்று திறந்துவைத்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகரத்தில் குற்றச்சம்பவங்களை கண்டறிவதற்கும் தடுப்பதற்கும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு மத்திகிரி காவல் நிலையத்தில் உள்ள பயன்பாடு அறையை மேற்கு மண்டல ஐஜி சுதாகர் திறந்து வைத்தார்.

தமிழக எல்லையான ஓசூர் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதி என்பது அனைவராலும் அறியப்பட்டது அதேபோல் மூன்று மாநிலங்களும் சந்திக்கும் பகுதியாகவும் உள்ளது.

தொழில் நிறுவனங்களில் பல்வேறு மாநிலத்தை சேர்ந்தவர்களும் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

ஒசூர் உட்கோட்டத்தை சுற்றிலும் மிக அருகில் அண்டை மாநிலமான கர்நாடகா, ஆந்திரா எல்லைகள் அமைந்துள்ளது. ஒசூர் நகரில் உள்ள தொழிற்சாலைகளில் பொரும்பாலும் வெளிமாநிலத்தில் இருந்து தொழிலாளர்கள் மிகுதியாக வந்து ஒசூரில் தங்கி வேலைசெய்தும், அண்டை மாநிலமான கர்நாடகவிற்கும் சென்று வருகின்றார்கள்.

ஓசூர் நகரில் குற்றங்களை கண்காணிக்கவும், குற்றவாளிகளை உடனுக்குடன் கண்டுபிடிக்கவும், விபத்து ஏற்படுத்தி செல்லும் வாகனங்களை கண்டுபிடிக்கவும், மற்றும் தேச தலைவர்களின் சிலைகளை பாதுகாக்கவும், கண்காணிப்பு கேமராக்கள் (CCTV) காவல் துறையினருக்கு மிகவும் உதவியாக இருந்துவருகின்றன.

கண்கானிப்பு கேமராக்கள் பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி ஒசூர் உட்கோட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் உள்ள கிராமங்களில் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தியும், ஒசூர் உட்கோட்டத்தில் உள்ள 7 காவல் நிலையங்களில் கடந்த 3 மாதங்களில் மட்டும் சுமார் 1500 கேமராக்ககள் புதியதாக பொறுத்தப்பட்டுள்ளது.

ஒசூர் உட்கோட்டத்தில் மட்டும் 866 இடங்களில் 3174 கேமராக்கள் போடப்பட்டுள்ளது. தமிழக எல்லையில் உள்ள சோதணை சாவடிகளில் தானாக நம்பர் பிளேட்டுகளை மட்டும் பதிவு செய்யக்கூடிய சுமார் 15 கேமாராக்கள் புதியதாக அமைக்கப்பட்டு செயல்பாட்டில் இருந்துவருகின்றன.

ஒசூரில் உள்ள உதவி காவல் கண்காணிப்பாளர் முகாம் அலுவலகம், மத்திகிரி, சிப்காட் ஆகிய இடங்களில் CCTV கேமரா கண்ட்ரோல் ரூம் செயல்பட்டுவருகின்றது.

மத்திகிரி காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள கண்ட்ரோல் ரூமை திங்கட்கிழமை மாலை கோவை மேற்கு மண்டல ஐஜி சுதாகர் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து தனியார் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய டிஎஸ்பி காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவலர்களுக்கும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.

மேலும் கண்காணிப்பு கேமரா வழங்கிய சமூக ஆர்வலர்கள் தொழில் துறை நிறுவனங்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் நினைவு பரிசு வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் சேலம் சரக டிஐஜி மகேஸ்வரி மற்றும் மாவட்ட எஸ்பி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!