ஓசூர்: மதுபாட்டில்கள் கடத்திய 6 பேர் கைது - 3 வேன், கார் பறிமுதல்

ஓசூர்: மதுபாட்டில்கள் கடத்திய 6 பேர் கைது -    3 வேன், கார் பறிமுதல்
X

ஓசூரில், கர்நாடகாவில் இருந்து மதுபாட்டில்கள் கடத்திய வேன்கள், ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டது.

ஓசூர் வழியாக, கர்நாடகாவில் இருந்து மதுபாட்டில்கள் கடத்திய 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 சரக்கு வேன்கள், ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டது.

ஓசூர் மதுவிலக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் தலைமையில் போலீசார், ஓசூர் ஜூஜூவாடி, சுங்கச்சாவடி ஆகிய பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, சரக்கு வாகனங்கள் மற்றும் காரில், கர்நாடக மாநில மதுபாட்டில்களை கடத்தி வந்ததாக, கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகில், ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்த மூவேந்தன், மருதுபாண்டியன், சூளகிரியை சேர்ந்த முனிராஜ், பாலக்கோட்டை சேர்ந்த அன்பரசன் ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 342கர்நாடக மாநில மதுபாட்டில்கள் மற்றும் 2 சரக்கு வேன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அதேபோல, ஓசூர் ஜூஜூவாடி சோதனைச்சாவடியில் நடந்த சோதனையில் கர்நாடக மாநில மதுபாட்டில்கள் கடத்தி வந்த, தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை சேர்ந்த ராஜீவ்காந்தி, பெங்களூருவை சேர்ந்த பால்ராஜ் ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 672 மதுபாட்டில்கள் மற்றும் ஒரு சரக்கு வேன், ஒரு காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
ai marketing future