கிருஷ்ணகிரி அருகே கீரனப்பள்ளி கிராமத்தில் சுற்றி வரும் ஒற்றை யானை: பொதுமக்கள் பீதி

கிருஷ்ணகிரி அருகே கீரனப்பள்ளி கிராமத்தில் சுற்றி வரும் ஒற்றை யானை: பொதுமக்கள் பீதி
X

பைல் படம்

கிருஷ்ணகிரி மாவட்டம் கீரனப்பள்ளி கிராமத்தில் சுற்றி வரும் ஒற்றை யானையால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த சானமாவு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன இந்த யானைகள் அவ்வப்போது தேன்கனிக்கோட்டை தளி வழியாக கர்நாடக மாநிலம் பன்னார்கெட்டா வனப்பகுதிக்கு செல்வதும் அங்கிருந்து மீண்டும் சானமாவு வனப்பகுதிக்கு வருவதுமாக உள்ளன

மேலும் இந்த யானைகள் அவ்வப்போது கிராமங்களுக்குள் புகுந்து விவசாய நிலங்களில் உள்ள விவசாய பயிர்களை நாசம் செய்வதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்த நிலையில் இன்று கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கீரனப்பள்ளி கிராமத்தில் புகுந்த ஒற்றை யானை ஒன்று அந்த கிராமத்திலேயே சுற்றிவருகிறது

ஒற்றை யானையால் பல்வேறு உயிர்கள் பலியாகி உள்ள நிலையில் மீண்டும் தற்போது மீண்டும் ஒற்றை யானை ஒன்று கிராமத்திற்குள் புகுந்து வலம் வந்து கொண்டிருப்பது கிராம மக்களிடையே பெரும் பீதியை கிளப்பியுள்ளது.

இந்த நிலையில் வனத்துறையினர் விரைந்து உயிர்ப்பலி ஏற்படும் முன் ஒற்றை காட்டு யானையை காட்டுக்குள் விரட்ட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!