வாலிபரை கொலை செய்ய முயற்சி செய்தவர் கைது

வாலிபரை கொலை செய்ய முயற்சி செய்தவர் கைது
X
மனைவியிடம் கள்ளக்காதலில் ஈடுபட்ட வாலிபரை கழுத்தறுத்து கொலை செய்ய முயற்சித்த கூலித் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த ராமாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன். அதே பகுதியை சேர்ந்த இவரது உறவினர் ஒருவருக்கும் கோவிந்தன் மனைவிக்கும் கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. இந்தநிலையில் நேற்று காலை கோவிந்தன் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகிய இரண்டு பேரும் சேர்ந்து மது அருந்தி உள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் கோவிந்தன் கத்தியால் அவரது உறவினரை கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றுள்ளார்.

இதில் படுகாயமடைந்த அவர் பெங்களூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து உத்தனப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி கோவிந்தன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தார்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!