கிருஷ்ணகிரியில் 18 பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு: கலெக்டர் தகவல்!

கிருஷ்ணகிரியில் 18 பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு: கலெக்டர் தகவல்!
X
கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த 18 பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திரபானு கூறுகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த 18 பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அந்த அடிப்படையில் 18 நபர்களுக்கும் கருப்பு பூஞ்சை பாதிப்பிற்கு உண்டான சிகிச்சை முன்னேச்சரிக்கையாக அளிக்கப்படுகிறது.

தற்போது வரை அந்த 18 நபர்களுக்கும் கருப்பு பூஞ்சை பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படவில்லை. அவர்களுக்கு தேவையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இருப்பினும் முன்னேச்சரிக்கை நடவடிக்கையாக அந்த 18 நபர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!