தாறுமாறாக விலை மாறும் தக்காளி: விவசாயிகள் வேதனை, மக்கள் திண்டாட்டம்
தமிழகத்தின் தொடர் மழை காரணமாக தக்காளி பழம் நாளுக்கு நாள் விலை ஏறிக்கொண்டே இருக்கிறது விவசாயிகள் கவலையுடன் மகிழ்ச்சியடைந்து வருகின்றனர், இல்லத்தரசிகள் வேதனையுடன் வாங்கிச் செல்கின்றனர்.
ஓசூர் பகுதியில் தகுந்த சீதோஷ்ண நிலை நிலவி வருவதால் காய்கறிகள் பூக்கள் விவசாயிகள் அதிக அளவில் பயிரிடுகின்றனர். தற்போது தொடர் மழை காரணமாக தக்காளியின் விலையில் ஏற்றம் தான் பரபரப்பாக பேசப்படுகிறது.
விவசாயிகள் சிலர் தெரிவிக்கையில் தொடர் மழை காரணமாக தோட்டத்தில் பறிக்க முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டு கீழே விழுந்து சேதமடைந்துள்ளது. பத்து முறை அறுவடை செய்யக்கூடிய தக்காளி தற்போது இரண்டு முறை மட்டுமே அறுவடை செய்துள்ளதாக தெரிவித்தனர். விவசாயிகள் விலையேற்றம் நல்ல முன்னேற்றம் உள்ளது இருந்தபோதும் செடிகள் காய்ந்து அழுகிவிட்டதால் எங்களுக்கு போதிய வருமானம் இல்லை என கவலையுடன் தெரிவிக்கின்றனர்.
நன்றாக விளைந்த தக்காளி தோட்டத்தில் பறிக்கக்கூடிய விவசாயிகள் நன்றாக லாபம் வரும் என்று தான் நாங்கள் நினைக்கிறோம். ஆனால் தாங்கள் செலவு செய்ததை விட தற்போது குறைந்த வருமானம்தான் கிடைப்பதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர். மழைக்காலம் என்பதால் அறுவடை செய்ய முடியவில்லை கூலி ஆட்கள் கிடைப்பதில்லை அறுவடை செய்யப்பட்ட தக்காளிகளை குறைந்த விலைக்கு வாங்கி சென்று அதிக லாபம் செய்பவர்கள் வியாபாரிகள் தான் எனவே விவசாயிகளுக்கு போதிய வருமானம் கிடைப்பதில்லை எனவே தமிழக அரசு நேரடி கொள்முதல் செய்து விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.
தோட்டத்தில் 25 கிலோ கொண்ட பெட்டி ரூபாய் 1500 க்கு விற்பனை செய்கின்றனர். நேற்று ரூபாய் 2000 விற்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஓசூர் காய்கறி சந்தைகளில் கிலோரூபாய் 90 முதல் 100 வரை விற்பனை செய்கின்றனர் ஆனால் மற்ற மாவட்டங்களில் ரூ120 முதல்130 வரை விற்பனை செய்கின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu