/* */

விருதுநகர் போலீசிடம் ஒப்படைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

தமிழக மாநில எல்லையான அத்திப்பள்ளி அருகே அழைத்து வரப்பட்ட ராஜேந்திர பாலாஜி, விருதுநகர் போலீசிடம் ஒப்படைப்பு.

HIGHLIGHTS

விருதுநகர் போலீசிடம் ஒப்படைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
X

விருதுநகர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட முன்னாள் ராஜேந்திர பாலாஜி.

தமிழக முன்னாள் பால்வளத்துறை அமைச்சரான ராஜேந்திர பாலாஜி, ஆவின் உள்ளிட்ட துறைகளில் வேலை வாங்கி தருவதாக 3கோடி ரூபாய் வரை பணம் பெற்று மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், முன்ஜாமின் கோரிய ராஜேந்திர பாலாஜி மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனையடுத்து ராஜேந்திர பாலாஜி தலைமறைவானார். அவரை கைது செய்ய பல்வேறு தனிப்படைகள் அமைத்து கர்நாடக, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஒசூரை சேர்ந்த தனிப்படை போலிசார், இன்று கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலையில் காரில் சென்று கொண்டிருந்த, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

அவருடன், தலைமறைவாக இருக்க உதவிய கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜக பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். கர்நாடகா மாநில தனியார் காரில் அழைத்து வரப்பட்ட முன்னாள் அமைச்சர் கர்நாடக மாநிலம் எல்லையான அத்திப்பள்ளி என்னுமிடத்தில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி அருகே ராஜேந்திர பாலாஜியை தனிப்படை போலீசார் விருதுநகர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

அவருக்கு உதவியதாக கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகி உட்பட 4பேர், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி என 5 பேரும் பலத்த பாதுகாப்புடன் அனுப்பி விருதுநகர் அழைத்து வரப்பட்டு வருகின்றனர்.

Updated On: 5 Jan 2022 2:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  2. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  3. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  4. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்
  6. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கிவி ஜூஸ் - இனிமேல் மிஸ் பண்ணாதீங்க!
  7. ஆன்மீகம்
    பூஜை அறையை எப்போதும் சுகந்தமாக வைத்திருக்க என்ன செய்யலாம்?
  8. தேனி
    தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!
  9. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!
  10. குமாரபாளையம்
    இரண்டு மணி நேர மழையால் நிலவிய குளிர்ச்சி! வீடு சேதம்!