லாரி டிரைவர் வெட்டிக்கொலை: சிறையில் இருந்து வெளிவந்த சில மாதத்தில் பரிதாபம்

லாரி டிரைவர் வெட்டிக்கொலை: சிறையில் இருந்து வெளிவந்த சில மாதத்தில் பரிதாபம்
X
ஓசூர் அருகே குண்டாஸ் வழக்கில் இருந்து வெளியே வந்த ஒன்றரை மாதத்தில், மினி லாரி டிரைவர் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டது, பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த ராஜாஜி லே-அவுட் பகுதியைச் சேர்ந்தவர் அபி என்கிற அபிலாஷ். மினி லாரி டிரைவர். இவர் மீது கொலை, கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 வழக்குகள் உள்ளன. இவர் குண்டாசில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு, கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி வெளியே வந்துள்ளார்.

இந்நிலையில், இவருக்கும் இவரது நண்பரான ஓசூர் சிப்காட் பேடரப்பள்ளி பகுதியைச் சேர்ந்த சபரி சிங் என்பவருக்கும் பைனான்ஸ் சம்பந்தமாக தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்றிரவு 9 மணி அளவில் ஓசூர் சிப்காட் அடுத்த பேடரப்பள்ளி ராஜாஜி நகர் நீர்த்தொட்டி அருகே சென்று கொண்டிருந்த அபியை, சபரி சிங் மற்றும் கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளி பகுதியைச் சேர்ந்த நவீன் ஆகிய 2 பேரும் வீச்சருவாளால் சரமாரியாக வெட்டி சாய்த்தனர்.

இதில் அபிலாஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.அவரது சகோதரர் கொடுத்த புகாரின் பேரில் சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இந்த கொலை தொடர்பாக, சபரிசிங் மற்றும் நவீன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள அவர்களை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!