ஒசூர் அருகே உணவு சமைப்பதில் தகராறு: வடமாநில தொழிலாளி குத்திக் கொலை

ஒசூர் அருகே உணவு சமைப்பதில் தகராறு: வடமாநில தொழிலாளி குத்திக் கொலை
X
பைல் படம்.
ஒசூர் அருகே உணவு சமைப்பதில் ஏற்பட்ட தகராறில் வடமாநில தொழிலாளி குத்திக் கொலை செய்யப்பட்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அடுத்த பாத்தக்கோட்டா கிராமத்தில் ஷாகில் என்னும் கிரானைட் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இதில் வடமாநில தொழிலாளர்கள் 10க்கும் அதிகமானோர் கூலி தொழில் செய்து வருவதால் அவர்களுக்கான தொழிற்சாலையிலேயே அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

கடந்த 3 தினங்களுக்கு முன், மேற்கு வங்காளத்தை சேர்ந்த சம்பு தத்தி(37) என்பவரும், அசாமை சேர்ந்த சிபு(21) என்பவரும் புதியதாக வேலைக்கு சேர்ந்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து உணவு சமைப்பதில் இருவருக்கும் சண்டை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. குடிபோதையில் இருந்த சிபு, சம்பு தத்தி உணவு சாப்பிட்டு வந்தபோது உணவு தட்டை காலால் மிதித்ததால், கடும் ஆத்திரத்திற்கு உள்ளான சம்பு தத்தி, காய்கறிகளை நறுக்க பயன்படுத்திய கத்தியினை சிபுவின் இடுப்பு பகுதியில் குத்தியதில் அவர் இரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து வந்த உத்தனப்பள்ளி போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, தலைமறைவாகி இருந்த சம்பு தத்தியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!