வங்கி கணக்கை ஹேக் செய்து 8 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் அபேஸ்

வங்கி கணக்கை ஹேக் செய்து 8 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் அபேஸ்
X
ஓசூரில் தனியார் நிறுவன அதிகாரியின் வங்கி கணக்கை ஹேக் செய்து ரூபாய் 8 லட்சத்து 54 ஆயிரத்தை மர்ம நபர்கள் அபேஸ் செய்தனர்.

ஓசூர் தனியார் நிறுவன அதிகாரியின் வங்கி கணக்கை ஹேக் செய்து, 8 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் அபேஸ் : சைபர் கிரைம் போலீசார் விசாரணை.

ஓசூரில் தனியார் நிறுவன அதிகாரியின் வங்கி கணக்கை ஹேக் செய்து ரூபாய் ௮ லட்சத்து 54 ஆயிரத்தை மர்ம நபர்கள் அபேஸ் செய்தனர். இதுதொடர்பாக கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஓசூர் மூக்கண்டப்பள்ளி பகுதியில், செயல்பட்டு வரும் ஒரு தனியார் நிறுவனத்தில் முதன்மை அலுவலராக செந்தில்நாதன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு ஸ்பின்னிங் மில்லில் 8 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய்க்கு பொருட்களை வாங்கியுள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த ஸ்பின்னிங் மில் நிர்வாகத்தினர் செந்தில்நாதனிடம் பணத்தை கேட்டுள்ளனர். இதனையடுத்து செந்தில்நாதன் தான் கொடுக்க வேண்டிய பணம் 8 லட்சத்து 54 ஆயிரம் ரூபாயை ஆன்லைன் மூலமாக அவர்களுக்கு வழங்கியுள்ளார்.

இந்த நிலையில் கடந்த 19ஆம் தேதி சம்பந்தப்பட்ட ஸ்பின்னிங் மில்லில் இருந்து பணத்தை வழங்குமாறு செந்தில்நாதனிடம் திரும்பவும் கேட்டுள்ளனர். அப்போது அவர் தான் பணத்தை ஆன்லைன் மூலமாக செலுத்தி விட்டதாக கூறியுள்ளார். ஆனால் அவர்கள் தங்களின் கணக்கிற்கு பணம் வரவில்லை என தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து செந்தில்நாதன் இதுகுறித்து கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினார்.

விசாரணையில் செந்தில்நாதனின் வங்கி கணக்கை மர்மநபர்கள் ஹேக் செய்து, பணம் முழுவதையும் அபேஸ் செய்தது தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!