ஒசூரில் 2 வீடுகளில் 10 பவுன் நகை, பணம் திருட்டு: மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

ஒசூரில் 2 வீடுகளில் 10 பவுன் நகை, பணம் திருட்டு: மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
X

பைல் படம்.

ஒசூரில் வெவ்வேறு இடங்களில் 2 வீடுகளில் 10 பவுன் நகை, பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே பேகேப்பள்ளி, மகாலட்சுமி நகரைச் சோ்ந்தவா் அமீா்கான் (42). உத்தனப்பள்ளியில் தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா். அவா் வேலைக்கு சென்றிருந்தபோது, மா்ம நபா்கள் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 8 பவுன் தங்க நகை, ரூ.37 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றனா்.

இது குறித்து அமீா்கான் அளித்த புகாரின்பேரில் சிப்காட் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

அதேபோல் ஒசூா், முத்து மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் நாகராஜி ராவ் (47). தனியாா் நிறுவனக் காவலாளி. இவா் வீட்டை பூட்டி விட்டு, வாணியம்பாடியில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றிருந்தாா். மீண்டும் வீட்டுக்கு வந்து பாா்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 2 பவுன் தங்க நகைகள், வெள்ளிக் கொலுசு திருட்டு போய் இருந்தது.

இதுகுறித்து நாகராஜிராவ் ஒசூா் நகர காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன் பேரில் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Tags

Next Story
ai in future agriculture