ஓசூரில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள்: ரூ.15 லட்சத்தில் சிசிடிவி கேமரா வழங்கல்

ஓசூரில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள்: ரூ.15 லட்சத்தில் சிசிடிவி கேமரா வழங்கல்
X

பிரகாஷ் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகளிடம் சிசிடிவி கேமராக்களை வழங்கிய  ஒசூர் சட்டமன்ற உறுப்பினர்.

ஓசூரில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு 15 லட்சம் மதிப்பீட்டில் கண்காணிப்பு கேமரா வழங்கப்பட்டது

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மாநகர திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் சிசிடிவி கேமரா குடியிருப்பு பகுதியில் பொருத்துவதற்காக இலவசமாக வழங்கப்பட்டது.

இந்த சிசிடிவி கேமராக்கள் அரசனட்டி பகுதியில் கிரீன் கார்டன், சூரிய நகர், சாய் நகர், ரோஸ் கார்டன், அமிர்தா நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு மாநகர திமுக சார்பில் இலவசமாக வழங்கப்பட்டது.

இதனை ஒசூர் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகளிடம் வழங்கினார்.

நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி கேக் வெட்டி குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து அப்பகுதி மக்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்