கந்திகுப்பம் அருகே 10 சவரன் தங்கக்காசு மாலை, டூ வீலர் திருட்டு

கந்திகுப்பம் அருகே 10 சவரன் தங்கக்காசு மாலை, டூ வீலர் திருட்டு
கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பம் அருகே 10 சவரன் தங்க காசு மாலை மற்றும் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்

கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் அடுத்த பி.ஆர்.ஜி. மாதேப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சுதர்சன். இவர், நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். காலையில் வந்து பார்த்தபோது வீட்டின் முன் இருந்த இரும்பு கேட்டின் பூட்டை உடைக்கப்பட்டு இருந்தது.

இதை பார்த்து சுதர்சன் அதிர்ச்சியடைந்தார். வீட்டிற்குள் சென்று பார்த்த போது, 10 சவரன் தங்கக்காசு மாலை மற்றும் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சுதர்சன் கந்திகுப்பம் போலீசில் புகார் அளித்தார் புகாரின் பேரில், எஸ்ஐ விஜயவாணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Read MoreRead Less
Next Story