அதிமுகவை உடைய கேபி முனுசாமி காரணமாக போகிறார்: ஸ்டாலின்

அதிமுகவை உடைய கேபி முனுசாமி காரணமாக போகிறார்: ஸ்டாலின்
X

அதிமுகவை உடைய கேபி முனுசாமி காரணமாக இருக்க போகிறார் என கிருஷ்ணகிரியில் மு.க. ஸ்டாலின் பேசினார்.

கிருஷ்ணகிரியில் திமுக சார்பில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தலைப்பில் பொது மக்களை சந்திக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றுக்கொண்ட திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பின்னர் பேசியது: நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு தீர்க்கப்படாத இந்தக் கோரிக்கைகள் 100 நாள்களுக்குள் தீர்க்கப்படும். அவ்வாறு தீர்க்கப்படவில்லை என்றால் நீங்கள் என்னிடம் நேரடியாக கேள்வி கேட்கலாம்.

கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட மக்களின் உடல்நிலை பிரச்னைகளை போக்கும் வகையில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தைத் தீவிரமாகச் செயல்படுத்தினோம். அதற்குள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் இந்த மாவட்டத்தில் இந்த திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. அதிமுக ஆட்சியில் பணி இழந்த மக்கள் நலப் பணியாளர்களுக்கு திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மீண்டும் பணி வழங்குவோம். ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் கேபி முனுசாமியின் பதவிகள் பறிக்கப்பட்டன. மீண்டும் அவருக்குப் பதவி ஏதும் வழங்கப்படவில்லை. அதிமுகவை உடைக்க கேபி முனுசாமி காரணமாக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீங்கள் அளித்துள்ள மனுக்கள் என் முதுகில் ஏற்றப்பட்ட பாரம். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் 100 நாள்களில் இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். தமிழக அரசுக்கு முற்றுப்புள்ளி வைக்க, நாம் இங்குக் கூடியுள்ளோம் என பேசினார். இந்தக் கூட்டத்தில் எம்எல்ஏக்கள் செங்குட்டுவன், பிரகாஷ், முருகன், சத்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags

Next Story
ஈரோட்டில் வருமான வரித் துறை சோதனை நிறைவு..!