/* */

கோடநாடு வழக்கு: கைதான இருவருக்கு நவ.22 வரை நீதிமன்றக்காவல்

கோடநாடு வழக்கு விசாரணையில், ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள இருவரையும், நவ.22 வரை நீதிமன்ற காவலில் வைக்க, நீதிமன்றம் உத்தரவிட்டது.

HIGHLIGHTS

கோடநாடு வழக்கு: கைதான இருவருக்கு நவ.22 வரை நீதிமன்றக்காவல்
X

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு மறுவிசாரணை தொடங்கப்பட்டதில் இருந்து சாட்சியங்களிடமும் குற்றம் சாட்டப்பட்டவர்களிடமும் 5 தனிப்படை கொண்ட போலீசார், உதகையில் உள்ள பழைய எஸ்பி அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த மறு விசாரணையில், கடந்த அக்டோபர் 25 ஆம் தேதி, கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மூளையாக செயல்பட்டு, கார் விபத்தில் இறந்து போன கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் அவரது உறவினர் ரமேஷ் ஆகியோர், போலீசாரால் கைது செய்யப்பட்டு, நீலகிரி மாவட்டம் கூடலூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவர்கள் இருவருக்கும், நவம்பர் 8 இன்று வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரும் இன்று உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி சஞ்சய் பாபா, இருவருக்குமான நீதிமன்ற காவலை நவ. 22 ம் தேதி வரை வரை நீட்டித்து உத்தரவிட்டார்.

இவர்கள் இருவருக்குமான ஜாமின் மனு மீதான விசாரணை, நாளை மறுநாள் நவம்பர் 10 க்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே நவ 8 வரை உள்ள இடைபட்ட நாட்களில், இவர்கள் இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டு இருவரையும் போலீஸ் காவலில் 11 நாட்கள் விசாரணை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Updated On: 8 Nov 2021 7:38 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
  2. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்
  3. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  6. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  7. ஈரோடு
    பிரதமர் அலுவலக அதிகாரி போல் நடித்து ரூ.28 லட்சம் மோசடி: ஐடி நிறுவன...
  8. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  10. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா