கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: 2 பேர் கோர்டில் ஆஜர்

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: 2 பேர் கோர்டில் ஆஜர்
X

ஊட்டி மாவட்ட நீதிமன்றம்.

2 வாரம் நீதிமன்ற காவலை நீட்டித்து வருகிற டிசம்பர் 6-ம் தேதி வரை சிறையில் அடைக்க உதகை கோர்ட் உத்தரவிட்டது.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தடயங்களை அழித்ததாக கனகராஜின் அண்ணன் தனபால், நெருங்கிய உறவினர் ரமேஷ் ஆகிய 2 பேரை கடந்த 25-ம் தேதி போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து கூடலூர் கிளை சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர். இருவரையும் தனித்தனியாக சோலூர்மட்டம் போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

நீதிமன்ற காவல் முடிவடைந்ததால் உதகை கோர்ட்டில் போலீசார் தனபால், ரமேஷ் ஆகிய 2 பேரை அழைத்து வந்து மாவட்ட நீதிபதி சஞ்சய் பாபா முன்னிலையில் ஆஜர்படுத்தினர். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கைதான தனபால், ரமேஷ், ஆகிய 2 பேருக்கு மேலும் 2 வாரம் நீதிமன்ற காவலை நீட்டித்து வருகிற டிசம்பர் 6-ம் தேதி வரை சிறையில் அடைக்க உதகை கோர்ட் உத்தரவிட்டது.

தனபால், ரமேஷ் ஆகிய 2 பேருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று மீண்டும் உதகை கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி வருகிற 26-ந் தேதி ஜாமீன் மனு மீதான விசாரணையை தள்ளி வைத்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!