குளித்தலை உழவர் சந்தை முன்பு வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்..!

குளித்தலை உழவர் சந்தை (மாதிரி படம்) வாக்குச் சாவடி முகவர்கள் கூட்டத்திற்காக.
கரூர் மாவட்டம் குளித்தலை நகர வார்டுகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பூத் எண்: 48ல் 8 மற்றும் 20 வது வார்டு வாக்கு சாவடி முகவர்களுக்கான கூட்டம் குளித்தலை உழவர் சந்தை முன்பு நடைபெற்றது.
இந்த முகவர் கூட்டத்திற்கு குளித்தலை எம்.எல்.ஏ இரா. மாணிக்கம் தலைமை வகித்த்தார். வார்டு உறுப்பினர் சக்திவேல் கூட்டத்திற்கு வந்திருந்தோரை வரவேற்றுப் பேசினார். கூட்டத்தில் எம்.எல்.ஏ மாணிக்கம் பேசுகையில், 'உறுப்பினர் சேர்க்கையில் நாம் தீவிரம் காட்டவேண்டும். தேர்தல் காலத்தில் மட்டுமே கட்சியினர் மற்றும் பொதுமக்களை சந்திக்காமல் அவர்களது தேவையறிந்து நாம் செயல்படவேண்டும். எல்லா பகுதிகளிலும் குடிநீர் உட்பட அடிப்படை பிரச்னைகள் பொதுமக்களுக்கு ஏற்படாமல் நாம் கவனிக்க வேண்டும். உங்கள் பகுதிகளிலேயே இருக்கும் பிரச்னைகளை களைய முற்பட வேண்டும்'. இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் திமுக பொதுக்குழு உறுப்பினர் ஜாபருல்லா, வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சாகுல் ஹமீது, நகர பொருளாளர் தமிழரசன், நகர துணை செயலாளர் செந்தில்குமார், மாவட்ட பிரதிநிதி மெடிக்கல் மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாக்கு சாவடி முகவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu